Jio Tag: தொலைந்துபோன உங்கள் பொருட்களை கண்டுபிடிக்க உதவும் கருவியை வெறும் 749 ரூபாய்க்கு வாங்கலாம்!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
இந்தியாவில் தொலைந்துபோன நமது முக்கியமான பொருட்களை கண்டுபிடிக்க உதவும்
ஸ்மார்ட் ப்ளூடூத்
ட்ராக்கர் ஒன்றை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. JioTag என்று அழைக்கப்படும் இந்த கருவி அனைத்து ஸ்மார்ட்போன் கருவிகளிலும் வேலை செய்யும்.

இதேபோன்ற தொலைந்த பொருட்களை கண்டுபிடிக்க உதவும் Apple நிறுவனத்தின் AirTag விலையை விட இது மிகவும் குறைவாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ப்ளூடூத் மூலமாக நமது தொலைந்துபோன பொருட்களை இதை வைத்து சுலபமாக கண்டுபிடிக்கலாம்.
Jio Tag வசதிகள்ஒரு வருடம் தாங்கக்கூடிய அளவு இதன் பேட்டரி நீடிக்கும் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை இரண்டு முறை டேப் செய்வதன் மூலம் நமது ஸ்மார்ட்போன் ரிங் செய்யலாம். நமது பணப்பை, சாவி என சிறிய பொருட்கள் எதுவாக இருந்தாலும் இந்த Jio Tag அதை கண்டுபிடிக்க நமக்கு உதவும்.
வீட்டின் உள்ளே 20 மீட்டர் தூரத்திலும், வீட்டின் வெளியே 50 மீட்டர் தூரம் தொலைவிலும் இது வேலை செய்யும். இதில் சமீபத்திய ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி வசதி உள்ளது.மற்ற அம்சங்கள்இதில் உள்ள Community Find Feature மூலமாக கடைசியாக பொருள் இருந்த இடம் பற்றிய விவரம் நமக்கு தெரியவரும். Jio Things App மூலமாக காணாமல் போன Jio Tag கருவிகளை நம்மால் சுலபமாக கண்டுபிடிக்கலாம். இதனுடன் கூடுதல் பேட்டரி மற்றும் கேபிள் வருவதால் எந்த பொருளிலும் இதை வைக்கலாம்.​Apple Air Tag கருவியை விட சிறந்ததா?சிறிய பொருட்களை கண்டுபிக்க Jio Tag போதுமான தூரத்தில் வேலை செய்கிறது. மேலும் விலை குறைவாகவும் இருப்பதால் நமது பட்ஜெட் மீறி செல்லாது.ஆனால் Apple AirTags மிகவும் விலை உயர்ந்த பொருட்களாக உள்ளன. 30 அடிக்கு மேல் இருக்கும் உங்கள் காணாமல் போன பொருட்களை ஐபோன்கள் மூலமாக கண்டுபிடிக்கலாம். நீங்கள் தொலைத்த பொருட்களுக்கு அருகில் வேறு ஏதாவது ஐபோன் இருந்தால் அதன் ப்ளூடூத் கனெக்சன் பயன்படுத்தி பொருட்களை அது கண்டுபிடிக்கும்.Apple Tag பின்னடைவு​ஆப்பிள் கருவியில் இருக்கும் மிகப்பெரிய பிழை எதுவென்றால் இதில் GPS இல்லை அதனால் இது வேலை செய்ய நமக்கு பலரது ஐபோன்கள் உதவி தேவை. நகர் புறங்களில் பலர் ஐபோன் பயன்படுத்துவார்கள் என்றாலும் மற்ற இடங்களில் நமக்கு இது உதவாது.
மேலும் இது ஆன்ட்ராய்டு போன்களில் வேலை செய்யாது என்பதால் இதை வாங்கி எந்த பெரும்பாலான மக்களுக்கு எந்த பயனும் இல்லை. முக்கியமாக ஆப்பிள் கருவி என்பதால் இதன் விலை அதிகமாக உள்ளது.​விலை விவரம் (Jio Tag Price)இதன் உண்மை விலை 2,499 ஆயிரம் ரூபாய் என்றாலும் Jio அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இதன் விலை வெறும் 749 ரூபாய் ஆகும். Apple AirTag பொறுத்தவரை 3,490 ஆயிரம் ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
​செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.