மும்பை: மின்சார கனவு படத்தில் “தங்க தாமரை மகளே” பாடலில் நடித்து தமிழ்நாட்டு ரசிகர்களையும் சேர்த்து தகிக்க வைத்த நடிகை கஜோல் இந்த வயதிலும் தொடர்ந்து வெப்சீரிஸ்கள், படங்கள் என மிரட்டி வருகிறார்.
சில மாதங்களாகவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சிகரமான போட்டோக்களையும் தனது மகளின் ஹாட் போட்டோக்களையும் அடுக்கி வந்தார் கஜோல்.
சமீபத்தில், கஜோல் நடித்து விரைவில் வெளியாக உள்ள தி குட் வைஃப் மற்றும் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 டீசர்கள் வெளியான நிலையில், தற்போது திடீரென சோஷியல் மீடியாவில் இருந்தே விலகுகிறேன் என அதிர்ச்சி பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் இது பக்கா டிராமா என ஏகப்பட்ட ட்ரோல் மீம்களை போட்டுத் தாக்கி வருகின்றனர்.
சோஷியல் மீடியாவுக்கு குட்பை: நடிகை கஜோல் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் சிக்கலை சந்தித்துள்ளேன். அதன் காரணமாக சமூக வலைதளங்களில் இருந்து விலகுகிறேன் என திடீரென அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டு சோஷியல் மீடியாவுக்கு குட் பை சொல்லி விட்டார்.
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான கஜோல் ஏன் திடீரென இப்படி சொல்லி விலகி உள்ளார் அதற்கு பின்னாடி என்ன காரணம் இருக்கு என ஒரு பக்கம் பாலிவுட்டே பதறி வரும் நிலையில், இதெல்லாம் பக்கா விளம்பர டிராமா என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
டிராமா குயின்: சமீபத்தில் கரண் ஜோஹர் பர்த்டே பார்ட்டிக்கு கவர்ச்சியாக சென்ற போட்டோக்களையும், தனது மகளுடன் எடுத்துக் கொண்ட தாறுமாறு கிளாமர் புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார் கஜோல்.
இந்நிலையில், திடீரென இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டதை பார்த்த நெட்டிசன்கள் அடுத்ததாக அவர் நடிப்பில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் The Good Wife மற்றும் நெட்பிளிக்ஸில் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என 2 வெப்தொடர்கள் வரும் நிலையில், அதற்கான ப்ரமோஷன் டிராமா தான் இது என விளாசி வருகின்றனர்.
அஜய் தேவ்கன் தான் காரணமா: நடிகை கஜோல் தனது கணவர் விமல் குட்கா அஜய் தேவ்கன் நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங் அல்லது தபு உடன் இருப்பதை கையும் களவுமாக கண்டு பிடித்து விட்டாரா? அது தான் இப்படியொரு முடிவுக்கு காரணமா? என்றும் குடும்ப பிரச்சனையை இழுத்து விட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.
மார்பிங் பிரச்சனையா: நடிகைகளின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை வைத்துக் கொண்டு அப்படியே ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் நிர்வாண வீடியோக்களையும் போட்டோக்களையும் தத்ரூபமாக வெளியிட்டு வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், அது போன்று ஏதாவது சிக்கலில் கஜோல் சிக்கிக் கொண்டாரா? என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன.
லஸ்ட் ஸ்டோரீஸ் 2வில் இளைஞருடன் காதல் கொள்வது போல காமக் கதையில் கஜோல் நடித்துள்ளார் என பயங்கரமாக ட்ரோல்கள் பறந்த நிலையில், தான் அவர் சோஷியல் மீடியாவில் இருந்து அதன் நெகட்டிவிட்டி தாங்க முடியாமல் ஒதுங்கிக் கொண்டார். தேவையில்லாமல் மேலும், நெகட்டிவிட்டிகளை பரப்பாதீங்க என கஜோலின் ரசிகர்கள் ஹேட்டர்களுக்கு சோஷியல் மீடியாவில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.