இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகிவரும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் காஷ்மீரில் துவங்கிய லியோ படத்தின் படப்பிடிப்பு எந்த வித தடையும் இன்றி தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.
முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்ற நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெற்று வருகின்றது. தற்போது இப்படத்தின் மிகப்பிரம்மாண்டமான பாடல் காட்சி சென்னையில் செட் அமைத்து படமாக்கப்பட்டு வருகின்றது. கிட்டதட்ட 2000 நடன கலைஞர்களுடன் உருவாக்கப்பட்டு வரும் இப்பாடல் லியோ படத்தில் ஓப்பனிங் பாடலாக இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
விட்டுக்கொடுத்த அனிருத்
மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலை போல இப்பாடலும் செம குத்து பாட்டாக தர லோக்கலாக இருக்கும் என்றும், விஜய்யின் அசத்தலான நடனத்தை இப்பாடலில் பார்க்கலாம் என்றும் தகவல்கள் வர ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்தனர்.
Leo: லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் எஸ்.ஜெ சூர்யா – விஜய் திடீர் சந்திப்பு..காரணம் இதுதானாம்..!
இந்நிலையில் தற்போது விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்திலிருந்து ஏதேனும் அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர். அநேகமாக லியோ படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என தெரிகின்றது. இது ஒருபக்கம் இருக்க லியோ படத்தில் இடம்பெறும் இந்த பிரமாண்டமான பாடலை பற்றி வெளியான தகவல் அனைவரின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
அதாவது இப்பாடலை அனிருத் மற்றும் அசல் கோலார் பாடியுள்ளனர் என ஒரு தகவல் வந்த நிலையில் தற்போது இந்த பாடலை விஜய் தான் பாடியுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. முதலில் இப்பாடலை அனிருத் மற்றும் அசல் கோலார் தான் பாடியுள்ளனர். அவர்களின் குரலில் உருவாக்கிய பாடலை வைத்து தான் தற்போது ஷூட்டிங்கை நடத்தி வருகின்றனர்.
லோகேஷின் விருப்பம்
ஆனால் இப்பாடலை விஜய் பாடினால் நன்றாக இருக்குமே என நினைத்த லோகேஷ் இதை அனிரூத்திடம் கூறியுள்ளார். அனிருத்தும் எந்த வித மறுப்பும் இன்றி இப்பாடலை தளபதியே பாடட்டும் என கூறியுள்ளார். இதையடுத்து தற்போது இப்பாடலை விஜய் பாட இருப்பதாகவும், இப்பாடல் தான் லியோ படத்திலிருந்து முதல் பாடலாக வெளியாகும் என்றும் தகவல் வந்துள்ளது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
ஆனால் இந்த தகவலில் எந்தளவிற்கு உண்மை உள்ளது என்பது பற்றி தெரியவில்லை. இந்நிலையில் தற்போது இந்த பிரமாண்டமான பாடல் காட்சி படமாக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்ததாக படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சி மட்டும் படமாக்கப்பட இருக்கின்றதாம். அதையும் படமாக்கப்பட்டு ஜூன் 12 ஆம் தேதிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் லோகேஷ் முடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.