இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Denzel Smith in Leo Film: லியோ படப்பிடிப்பு நிறைவடையப் போகிறது. இந்நிலையில் அந்த படத்தில் பிரபல நடிகர் டென்சல் ஸ்மித் சேர்ந்திருப்பது குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.
லியோலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் லியோ. படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் இருக்கிறது. இந்நிலையில் லியோ படத்தில் பிரபல நடிகரான டென்சல் ஸ்மித் சேர்ந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. பாலிவுட் படங்கள், வெப்தொடர்களில் நடித்து வரும் டென்சல் ஸ்மித் கிறிஸ்டோபர் நோலனின் டெனட் ஹாலிவுட் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.கே. ராஜன்நான் குறை சொல்லல – கே.ராஜன்சென்னைகாஷ்மீர் ஷெட்யூலை முடித்துக் கொண்டு ஊர் திரும்பிய பிறகு சென்னையில் தான் லியோ படப்பிடிப்பு நடந்து வருகிறது. அந்த ஷெட்யூலில் தான் டென்சல் ஸ்மித் கலந்து கொண்டாராம். அவர் தொடர்பான காட்சிகளை படமாக்கி முடித்துவிட்டாராம் லோகேஷ் கனகராஜ். நான்கு நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம் டென்சல் ஸ்மித். அவரின் கதாபாத்திரம் முக்கியமானதாகும் என்று கூறப்படுகிறது.
லோகேஷ்டென்சல் ஸ்மித் கண்டிப்பாக வில்லனாக தான் நடித்திருப்பார் என்று நம்பப்டுகிறது. ஏற்கனவே லியோவில் மிஷ்கின், கவுதம் மேனன், மதுசூதன் ராவ் என ஒரு வில்லன் பட்டாளமே இருக்கிறது. அது போதாது என்று நாளுக்கு ஒரு வில்லனாக சேர்த்துக் கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். படப்பிடிப்பு முடியும் நாள் வரை புதிதாக நடிகர்களை சேர்ப்பார் போன்று லோகி என தளபதி விஜய் ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அறிமுக பாடல்லியோ படத்தில் வரும் அறிமுக பாடல் காட்சியை தான் தற்போது ஷூட் செய்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். தினேஷ் மாஸ்டர் ஸ்டெப்ஸ் சொல்லிக் கொடுக்க விஜய் மற்றும் 500க்கும் மேற்பட்டோர் டான்ஸ் ஆடி வருகிறார்களாம். அடேங்கப்பா, 500க்கும் மேற்பட்டவர்களா, பயங்கர பிரமாண்டமாக இருக்கும் போன்றே. பிரமாண்டத்திற்கு பெயர் போன ஷங்கருக்கே டஃப் கொடுக்க கிளம்பிவிட்டார் லோகேஷ் கனகராஜ் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
ரூ. 350 கோடி வசூல்லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் படம் ரிலீஸாவதற்கு முன்பே ரூ. 350 கோடி வசூல் செய்துள்ளது. படத்தின் தியேட்டர், ஓடிடி, சாட்டிலைட், இசை உரிமங்கள் அதிக விலைக்கு போயிருக்கிறது. கேரளாவில் லியோ படத்தின் தியேட்டர் உரிமை ரூ. 16 கோடிக்கு போயிருக்கிறது. கேரளாவில் அதிக விலைக்கு போன தமிழ் படம் என்கிற பெருமையை பெற்றிருக்கிறது லியோ.
Leo: ரிலீஸுக்கு முன்பே 4 சாதனைகள் படைத்த லியோ: மாஸ் காட்டும் தளபதி விஜய்
உறுதி இல்லைபிரபல நடிகரான அர்ஜுனின் மகள் இயல் லியோ படத்தில் நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் த்ரிஷா, விஜய்யின் மகள் தான் இயல் என பேச்சு கிளம்பியிருக்கிறது. முன்னதாக லியோ படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிப்பதாக பேச்சு கிளம்பி அடங்கியது. ஆனால் எந்த தகவலையும் லோகேஷ் கனகராஜ் உறுதி செய்யவில்லை.
Trisha:பிரபல நடிகரின் இரட்டை பிள்ளைகளை வாழ்த்திய த்ரிஷா: அந்த செல்லம் தான் லியோ விஜய்யின் மகளா?
சஞ்சய் தத்லியோவில் விஜய்க்கு முக்கிய வில்லனே பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தான் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் ஒரு கேங்ஸ்டர் என்றும், விஜய்யின் அப்பாவாக நடிக்கிறார் என்றும் தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. விஜய்யின் அண்ணன் தான் அர்ஜுன். இது ஒரு கேங்ஸ்டர் குடும்ப படம் என்றும் பேசப்படுகிறது. யாரும் எதுவும் பேசுங்கள், நான் கதையை மட்டும் சொல்லவே மாட்டேனே என இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
Jyothika: ஜோதிகா விஷயத்தில் அட்லியால் முடியாததை தளபதி 68 இயக்குநர் வெங்கட் பிரபு செய்து காட்டுவாரா?