சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மூன்றாவது தலைமுறை லெக்சஸ் GX எஸ்யூவி ஆஃப்ரோடு சாகசங்களுக்கு ஏற்றதாக விளங்குகின்றது. முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட டிசைன் மற்றும் இன்டிரியரை பெற்றதாக வந்துள்ளது.
டொயோட்டாவின் லேண்ட் க்ரூஸர் பிராடோவை அடிப்படையாக GX 550 முதன்முதலில் 2007 ஆம் ஆண்டு அறிமுகமானது. அதைத் தொடர்ந்து 2009 ஆம் வருடத்தில் இரண்டாவது தலைமுறை வெளியானது. தற்பொழுது மூன்றாவது தலைமுறை வெளியாகியுள்ள நிலையில் பிராடோ 300 எஸ்யூவி இதன் வடிவமைப்பினை பகிர்ந்து கொள்ளும்.
2024 Lexus GX 550 SUV
GX மாடல் பாரம்பரிய பாடி ஆன் ஃபிரேம் சேஸ் உடன் புதிய TNGA-F மாடுலர் லேடர் ஃப்ரேம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதே பிளாட்ஃபாரம் தான் LX மற்றும் லேண்ட் க்ரூஸர், வரவிருக்கும் புதிய ஃபார்ச்சூனர் மற்றும் ஹைலக்ஸ் பிக்கப் ஆகியவற்றிலும் இருக்கும்.
வட அமெரிக்காவில் இரட்டை டர்போசார்ஜ் 349hp பவர் மற்றும் 649 Nm டார்க் வழங்கும், 3.5-லிட்டர் V6 என்ஜின் பொருத்தப்பட்டுளது. இதில் 10 வேக தானியங்கி கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
GX காரில் முழுநேர நான்கு சக்கர டிரைவ் மற்றும் லாக் செய்யக்கூடிய Torsen வரையறுக்கப்பட்ட ஸ்லிப் சென்டர் டிஃபரன்ஷியலை கொண்டுள்ளது. எலக்ட்ரானிக் முறையில் கட்டுப்படுத்தப்படும் டிரான்ஸ்ஃபெர் கேஸ் 4WD ஹை மற்றும் 4WD லோ இடையே மாறுகிறது, ஓவர்டிரெயிலில் லாக்கிங் ரியர் டிஃபெரன்ஷியலும் கிடைக்கிறது.
6 கேப்டன் இருக்கை மற்றும் 7 இருக்கை என இருவிதமான ஆப்ஷனை பெற்று புதிய 12.3-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் மற்றும் டேஷ்போர்டின் மையத்தில் பெரிய 14-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெறுகிறது.
பாக்ஸ் வடிவமைப்பினை கொண்ட லெக்சஸ் ஜிஎக்ஸ் 550 காரில் முன்புறம் லெக்ஸஸின் பாரம்பரிய சிக்னேச்சர் கிரில் மற்றும் ஹெட்லேம்ப் பெறுகிறது, பின்புறம் லைட்பார் உடன் டெயில்லேம்ப் வருகிறது.
லெக்ஸஸ் புதிய GX 550 இந்தியாவில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரக்கூடும்.