சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராகவுள்ள படம் ‘மாவீரன்’. இந்தப்படத்தை வெளியிடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிசியாக உள்ளது படக்குழு. இந்நிலையில் இந்தப்படத்தின் ரிலீஸ் குறித்து வெளியாகியுள்ள தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ படத்தினை மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் அதிரடியான அப்டேட் தற்போது வெளியாகவுள்ளது. அதன்படி விரைவில் ரிலீசாகவுள்ள ‘மாவீரன்’ படத்தை தமிழ்நாடு முழுவதும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களை வினியோகம் செய்து வருகிறது ரெட் ஜெயண்ட் நிறுவனம்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்நிலையில் தற்போது ‘மாவீரன்’ படத்தையும் தமிழ்நாடு முழுவதும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த டாக்டர், டான் படங்களின் திரையரங்கு வெளியீட்டு உரிமையையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
டான், பிரின்ஸ் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படமாக ‘மாவீரன்’ உருவாகி வருகிறது. யோகி பாபு நடிப்பில் ரிலீசாகி விமர்சனரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற ‘மண்டேலா’ பட இயக்குனர் மடோன் அஸ்வின் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படம் தமிழ், தெலுங்கு மொழியில் உருவாகியுள்ளது.
Kajol: வாழ்க்கையின் கடினமான சோதனை: கஜோலின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். பிரபல இயக்குனர் மிஷ்கின் இந்தப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். மேலும் சரிதா, யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மாவீரன்’ படம் வரும் ஜுலை 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயனின் அடுத்த படமாக ‘எஸ்கே 21’ உருவாகி வருகிறது. உலக நாயகனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். சிவகார்த்திகேயன் இராணுவ வீரராக நடிக்கும் இந்தப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். ‘எஸ்கே 21’ படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Vijay: அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை.. விஜய்யின் திடீர் முடிவால் ரசிகர்கள் கவலை.!