இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Vignesh Shivan, Nayanthara wedding anniversary: தனக்கும், நயன்தாராவுக்கும் திருமணமாகி அதற்குள் ஓராண்டு ஆகிவிட்டதே என வியந்து போஸ்ட் போட்டிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
திருமணம்நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 9ம் தேதி மகாபலிபுரத்தில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில் பிரமாண்டமாக திருமணம் நடந்தது. அந்த திருமணத்தில் கலந்து கொண்டு தாலி எடுத்துக் கொடுத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பாலிவுட் நடிகர் ஷாருக்கான், இயக்குநர் மணிரத்னம், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் என ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இந்நிலையில் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் திருமணமாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துவிட்டது.
கே. ராஜன்நான் குறை சொல்லல – கே.ராஜன்விக்னேஷ் சிவன்திருமணநாளையொட்டி நயன்தாராவுக்கு வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். தானும், நயன்தாராவும் வெளிநாட்டிற்கு சென்றபோது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு விக்னேஷ் சிவன் கூறியிருப்பதாவது, நேற்று தான் திருமணம் நடந்தது போன்று இருக்கிறது. திடீரென என் நண்பர்கள் எல்லாம் முதலாம் திருமண நாள் வாழ்த்துக்கள் என மெசேஜ் அனுப்புகிறார்கள். லவ் யூ தங்கமே. நீண்ட வழி நம் பயணம். சேர்ந்தே நிறைய சாதிக்க வேண்டியிருக்கிறது. நம் வாழ்வில் இருக்கும் நல்லவர்களின் நல்லெண்ணம் மற்றும் கடவுளின் அருளால் இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம் என்றார்.
இன்ஸ்டா போஸ்ட்View this post on InstagramA post shared by Vignesh Shivan (@wikkiofficial)பிள்ளைகள்இன்னொரு போஸ்ட்டில் தங்களின் இரட்டை பிள்ளைகளான உயிர், உலக் மற்றும் நயன்தாரா இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு விக்னேஷ் சிவன் கூறியிருப்பதாவது, என் உயிரோட ஆதாரம் நீங்கள் தானே. இந்த ஓராண்டில் நிறைய நடந்திருக்கிறது. எதிர்பாராத சோதனைகள். ஆனால் என்னை விரும்பும் குடும்பத்தார் இருக்கும்போது மீண்டும் நம்பிக்கை வருகிறது என்றார். மேலும் தன் குடும்பமே தனக்கு பக்கபலம் என பெருமையாக தெரிவித்துள்ளார்.
Kadhal Kondein: காதல் கொண்டேன் செகண்ட் ஹீரோ ஆதி டாக்சி ஓட்டுறாரா!: ரசிகர்கள் அதிர்ச்சி
தங்கமேView this post on InstagramA post shared by Vignesh Shivan (@wikkiofficial)கமெண்ட்விக்னேஷ் சிவன் என்ன போஸ்ட் போட்டாலும் அவரையும், நயன்தாராவையும் விளாசி கமெண்ட் போடுபவர்கள் இருக்கிறார்கள். அதை விக்னேஷ் சிவன் கவனிக்காமல் இல்லை. இதையடுத்தே நெகட்டிவாக கமெண்ட் போடுபவர்களுக்கு நெத்தியடி கொடுத்திருக்கிறார் விக்னேஷ் சிவன். நெகட்டிவ் கமெண்ட்டுகளுக்கு அடிமையாவர்கள் மன்னிக்கவும். நீங்கள் பாசிட்டிவிட்டியை தவிர்க்க முயற்சி செய்யவும் என தெரிவித்துள்ளார்.
Rajinikanth: ஜப்பானில் நடந்த ஆச்சரிய சம்பவம்: ரஜினி ரசிகர்கள் ஹேப்பி
வாழ்த்துஇன்று போன்று என்றுமே நீங்கள் இருவரும் ஒற்றுமையாகவும், சந்தோஷமாகவும் வாழ வாழ்த்துக்கள் அன்பான இயக்குநரே. நயன்தாராவுக்கு நீங்கள் கணவராக கிடைக்க அவர் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவர் உங்களுக்கு மனைவியாக கிடைக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்கிறீர்கள். உங்கள் இருவரையும் இப்படி பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது. நீங்கள் நல்லா இருக்க வேண்டும் என ரசிகர்கள் மனதார வாழ்த்தியுள்ளனர்.
மகிழ்ச்சிஉயிர் மற்றும் உலகின் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். ஆனால் அவர்களின் முகம் சரியாகத் தெரியாத புகைப்படங்களாக வெளியிடுகிறார். இந்நிலையில் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படங்களில் அந்த இரட்டை செல்லங்களின் முகம் ஓரளவுக்கு தெரிகிறது. இது போதும் அன்பான இயக்குநரே. புகைப்படங்களில் நயன்தாரா ரொம்ப சந்தோஷமாகவும், அழகாகவும் இருக்கிறார். அவரை சந்தோஷமாக பார்த்துக் கொள்வதற்கு நன்றி என நயன்தாரா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.