வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிராக ஜூலை முதல் வாரம் பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை குவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் ரஷ்ய சென்றிருந்த பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினை மாஸ்கோ அதிபர் மாளிகையில் சந்தித்து பேசினார். அப்போது உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட பெலாரஸ் ராணுவம் பயிற்சி மேற்கொள்வது, பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை சேகரித்து வைக்கும் கிடங்கை அமைப்பது போன்ற விஷயங்கள் குறித்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த சூழ்நிலையில் இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெலாரஸ் அதிபருடன் ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தப்படி ஜூலை 7,8 ம் தேதியன்று பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை குவித்து வைக்கும் கிடங்குகளை அமைக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான பணிகள் துவங்க உள்ளது .இக்கிடங்குகள் ரஷ்ய ராணுவத்தின் கண்காணிப்பில் வைக்கப்படும் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement