Rajinikanth Jailer: கேரளாவில் ரஜினியின் ஜெயிலரை முந்திய விஜய்யின் லியோ

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், தமன்னா உள்ளிட்டோர் நடித்திருக்கும் ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.

நான் குறை சொல்லல – கே.ராஜன்
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் கேரள தியேட்டர் உரிமம் எத்தனை கோடிகளுக்கு விற்பனை செய்யப்பட்டது என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது. மோகன்லால் நடித்தும் கூட ஜெயிலர் படம் கேரளாவில் ரூ. 9 கோடிக்கு தான் சென்றிருக்கிறதாம்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் கேரள தியேட்டர் உரிமை ரூ. 16 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது. லியோ உரிமையை வாங்கிய அதே நபர் தான் ஜெயிலர் தியேட்டர் உரிமையையும் வாங்கியிருக்கிறாராம்.

லியோவை விட ஜெயிலர் குறைவான விலைக்கு சென்றது குறித்து சமூக வலைதளங்களில் சீரியஸாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். கேரளாவில் அதிக விலைக்கு போன தமிழ் படமாக ரஜினியின் 2.0 இருந்தது. அந்த சாதனையை லியோ முறியடித்தது.

Leo: ரிலீஸுக்கு முன்பே 4 சாதனைகள் படைத்த லியோ: மாஸ் காட்டும் தளபதி விஜய்

லியோவின் சாதனையை ஜெயிலர் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படியாகும் என ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.

விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை கொடுத்த வேகத்தில் ரஜினியை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சன் திலீப்குமாருக்கு கிடைத்தது. ஜெயிலரில் ரஜினியை வைத்து அவர் என்ன செய்திருக்கிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜெயிலர் பட வேலையை முடித்துக் கொண்டு தன் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் லால் சலாம் படத்தில் நடிக்க சென்றுவிட்டார் ரஜினிகாந்த்.

மும்பை மற்றும் புதுச்சேரியில் நடந்த படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார். லால் சலாமில் மொய்தீன் பாயாக நடிக்கிறார் ரஜினி. கவுரவத் தோற்றம் தான் என்றாலும் இரண்டு சண்டை காட்சிகளில் வருவாராம். லால் சலாமில் முன்னாள் கிரிக்கெட் வீரரான கபில் தேவும் கவுரவத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

லால் சலாமை அடுத்து ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்கிறார் ரஜினி. லைகா நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கிறார்.

முன்னதாக தலைவர் 170 படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிடுவார் ரஜினிகாந்த் என பேசப்பட்டது. ஆனால் ஓய்வு குறித்து அவர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லையாம்.

லால் சலாமை போன்றே தலைவர் 170 படத்திலும் இஸ்லாமியராக நடிக்கிறார் ரஜினி. ஜெய்பீமை போன்றே தலைவர் 170 படத்தையும் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கவிருக்கிறாராம் ஞானவேல்.

தலைவர் 170 படப்பிடிப்பே இன்னும் துவங்காத நிலையில் அதன் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. தலைவர் 170 படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி.

தற்போதைக்கு தலைவர் 171 என அழைக்கப்படும் அந்த படத்தை உலக நாயகன் கமல் ஹாசன் தன் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.