இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
விஜய் தற்போது லியோ படத்தில் ஒருபக்கம் நடித்து வரும் நிலையில் மறுபக்கம் தன் அடுத்த படமான தளபதி 68 பற்றி அதிகாரபூர்வமாக அறிவித்தார். லியோ படத்தின் பேச்சே ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் தளபதி 68 படத்தின் அறிவிப்பு அவர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்தது.
அதுவும் விஜய் முதல் முறையாக வெங்கட் பிரபு போன்ற ஒரு இயக்குனருடன் இணைவது ஒட்டுமொத்த திரையுலகையும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக வெங்கட் பிரபு படம் என்றாலே புதுமையான கதைக்களத்தில் வித்யாசமான திரைக்கதையில் இருக்கும். எனவே விஜய் வெங்கட் பிரபுவுடன் இணைகிறார் என்றால் கண்டிப்பாக அப்படமும் வித்தியாசமானதாக தான் இருக்கும் என ரசிகர்கள் கணித்து வருகின்றனர்.
கண்டிஷன் போட்ட விஜய்
மேலும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைக்கிறார். புதிய கீதை படத்திற்கு பிறகு இருபது வருடங்கள் கழித்து விஜய்யின் படத்திற்கு யுவன் இசையமைப்பது மேலும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இந்நிலையில் தற்போது முழு கதையையும் தயார் செய்யும் பணியில் வெங்கட் பிரபு தீவிரமாக இறங்கியுள்ளார்.
Leo: லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் எஸ்.ஜெ சூர்யா – விஜய் திடீர் சந்திப்பு..காரணம் இதுதானாம்..!
விரைவில் விஜய் முழு கதையையும் கேட்டுவிட்டு படத்தின் பூஜையை துவங்குவார் என தெரிகின்றது. அநேகமாக விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 68 படத்தின் பூஜை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே விஜய்யின் பிறந்தநாளன்று லியோ மற்றும் தளபதி 68 படத்தின் அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக இருந்து வந்த நிலையில் தற்போது வெளியான ஒரு செய்தி அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது தளபதி 68 படத்தை பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தற்போது வெளியிடக்கூடாது என விஜய் ஸ்ட்ரிக்ட்டாக வெங்கட் பிரபுவிடம் கூறிவிட்டாராம். இதையடுத்து தளபதி 68 படத்தின் அறிவிப்புகள் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகாது என தெரிகின்றது.
ஒப்புக்கொண்ட வெங்கட் பிரபு
ஆனாலும் தளபதி 68 படத்தின் பூஜை ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளன்று தான் நடைபெறுமாம். ஆனால் அப்போது எந்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகக்கூடாது என்பது தான் விஜய்யின் கண்டிஷனாக இருக்கின்றதாம். எனவே இந்த கண்டிஷனுக்கு தளபதி 68 படக்குழு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகின்றது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இந்நிலையில் இது ஒருபக்கம் இருக்க சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய வெங்கட் பிரபு, தளபதி 68 படத்தின் அறிவிப்புகள் லியோ படம் வெளியான பின்னரே தான் வரும் என கூறியிருந்தார். எனவே இதையெல்லாம் வைத்து பார்க்கையில் கண்டிப்பாக தளபதி 68 அறிவிப்பு விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகாது என்றே தெரிகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.