வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: அதிபர் பதவியில் இருந்து விலகிய பிறகும், அரசின் ரகசிய ஆவணங்களை வைத்திருந்ததாக தன் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில், போலியான குற்றச்சாட்டுகளை சுமத்தி, ஊழல் நிறைந்த பைடன் நிர்வாகம் என்னை முடக்க பார்க்கிறது. ஆவணங்களை கையாண்டது குறித்து என் மீது குற்றம்சுமத்த பார்க்கிறது எனக்கூறியுள்ளார். ஆனால், டிரம்ப்பின் குற்றச்சாட்டை அமெரிக்க நீதித்துறை இன்னும் உறுதி செய்யவில்லை.
டிரம்ப்பின் வழக்கறிஞர் கூறுகையில், உளவுச்சட்டத்தை மீறி ஆவணங்களை வேண்டுமென்றே வைத்திருத்தல், தவறான அறிக்கை செய்தல், நீதியை தடுத்தல் மற்றும் சதி செய்தல் உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகளின் கீழ் டிரம்ப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது . அடுத்த வாரம் மியாமியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராக எனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முன்னாள் அதிபருக்கு இப்படி எல்லாம் நடக்கும் என நான் ஒரு போதும் நினைத்து பார்த்தது இல்லை எனக்கூறினார்.
குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான பதிவுகள் வெளியாகவிட்டாலும், டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்ற்சாட்டுகளில் நீதித்துறையை தடுத்தல் என்ற விவகாரம் முக்கியமானதாக உள்ளதாக அந்நாட்டு நாளிதழ்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement