நடிகர் விஜய் தனது 49 வது பிறந்தநாளை வரும் ஜுன் 22 ஆம் தேதி கொண்டாட தயாராகவுள்ளார். அவரின் பிறந்தநாளில் ரசிகர்கள் அன்னாதானம், இரத்ததானம் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்வது வழக்கம். மற்றொரு பக்கம் அவர் நடித்து வரும் படம் அல்லது நடிக்க போகும் படங்கள் குறித்த அப்டேட்களை சம்பந்தப்பட்ட படக்குழு வெளியிடும்.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
அந்த வகையில் வரும் 22 ஆம் தேதி என்னென்ன அப்டேட்கள் வெளியாக போகிறது என இப்போதே பலரும் ஆரூடம் கூறி வருகின்றனர். அந்த வகையில் விஜய் தற்போது நடித்து வரும் ‘லியோ’ படத்தின் மிரட்டலான கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை அவரின் பிறந்தநாளில் படக்குழு வெளியிடவுள்ளதாக தகவல்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்த வீடியோவில் ஒரு சிறப்பம்சமாக கமலின் வாய்ஸ் ஓவர் இடம்பெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அதே போல் விஜய் அடுத்ததாக நடிக்கவுள்ள ‘தளபதி 68’ பட பூஜை ஜுன் 22 ஆம் தேதி துவங்கவுள்ளதாகவும், அந்த நாளில் படத்தின் டைட்டில் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் தளபதி ரசிகாஸ் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்நிலையில் விஜய் பிறந்தநாளில் வெளியாகவுள்ள அப்டேட் குறித்து வலைப்பேச்சு வீடியோவில் பேசப்பட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுக்குறித்து பேசியுள்ள வலைப்பேச்சு அந்தணன் ‘தளபதி 68’ படம் குறித்த பேச்சுக்கள் துவங்கியதில் இருந்து ‘லியோ’ படம் பற்றிய பேச்சுக்கள் குறைந்துள்ளதால் விஜய் அப்செட்டில் உள்ளாராம். இதனால் தற்போதைக்கு ‘தளபதி 68’ படம் குறித்த எந்த தகவலும் வெளியாக வாய்ப்பில்லை என கூறியுள்ளார். அத்துடன் ‘லியோ’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகாது என்றும் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை மட்டும் படக்குழு வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Kajol: வாழ்க்கையின் கடினமான சோதனை: கஜோலின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
இதனால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கோலிவுட் சினிமா பெரிதும் எதிர்பார்க்கும் ‘லியோ’ படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக காஷ்மீரில் நடந்து வந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.
‘லியோ’ படத்தினை தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 68’ படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இந்தப்படத்தில் விஜய் ஜோடியாக ஜோதிகா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
போர் தொழில் பட முழு விமர்சனம்.! தரமான க்ரைம் திரில்லர்..