Vijay: விஜய்க்கு கோபம் வந்தா அவ்வளவுதான்..என்ன நடக்கும்னு தெரியாது..உண்மையை உடைத்த இயக்குனர்..!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
தளபதி விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகின்றார். படத்திற்கு படம் அடுத்தகட்டத்துக்கு செல்லும் விஜய் தற்போது லியோ படத்திற்காக 175 கோடி சம்பளமாக வாங்குகிறார். இதையடுத்து அவர் நடிக்கவுள்ள தளபதி 68 படத்திற்காக விஜய் 200 கோடி சம்பளமாக வாங்க இருப்பதாக செய்திகள் வருகின்றன.

இத்தனைக்கும் அவரின் கடைசி இரண்டு படங்களான பீஸ்ட் மற்றும் வாரிசு ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. இருந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை இரு படங்களும் அடைந்தது. எனவே விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு விஜய்யின் படங்கள் வசூலில் சாதனை படைத்து வருவதால் அவரின் படத்தை தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் போட்டிபோட்டு வருகின்றனர்.

விஜய்யின் கோபம்

சம்பளம் எத்தனை கோடியாக இருந்தாலும் சரி விஜய்யின் கால்ஷீட் கிடைத்தால் போதும் என்பதே தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர்களின் எண்ணமாக இருக்கின்றது. எனவே தான் விஜய்யின் சம்பளமும் படத்திற்கு படம் உயர்ந்து வருகின்றது.

SJ Surya: தன் முதல் சம்பளத்தில் உதவி இயக்குனர்களுக்கு பைக் வாங்கி கொடுத்த எஸ்.ஜெ சூர்யா..நெகிழ்ச்சியாக பேசிய மாரிமுத்து..!

இந்நிலையில் விஜய் தற்போது இளம் இயக்குனர்களாக தேர்ந்தெடுத்து அவர்களின் இயக்கத்திலேயே நடித்து வருகின்றார். அட்லீ, லோகேஷ், நெல்சன் என தொடர்ந்து முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து வரும் விஜய் ஒரு கட்டத்தில் புதுமுக இயக்குனர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வந்தார்.

அவர்களும் விஜய்யின் நம்பிக்கைக்கு ஏற்றாற்போல அவருக்கு ஹிட் படங்களை கொடுத்துள்ளனர். அந்த வரிசையில் இடம்பிடித்தவர் தான் பேரரசு. திருப்பாச்சி, சிவகாசி என இரு மெகாஹிட் படங்களை விஜய்க்கு கொடுத்து அவரை பட்டிதொட்டி எங்கும் பிரபலமாக்கிய இயக்குனர் தான் பேரரசு.

ஷாக்கான பேரரசு

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய்யை பற்றியும், அவரின் கோபத்தைப்பற்றியும் பேசியுள்ளார் பேரரசு. அவர் கூறியதாவது, ஒருமுறை சிவாகாசி படத்தின் படப்பிடிப்பின் போது விஜய்யை பேட்டி எடுக்க பத்திரிகையாளர்கள் சிலர் வந்திருந்தனர். விஜய்யும் அவர்களுக்கு பேட்டி கொடுத்தார். இதையடுத்து அவர்கள் படத்தின் கதை பற்றியும், ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்களையும் பத்திரிக்கைகளில் போட்டுவிட்டனர்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இதனால் உச்சகட்ட கோபத்திற்கு ஆளான விஜய் போனில் அந்த செய்தியை போட்டவரை வெளுத்தி வாங்கிவிட்டார். அப்போது தான் தெரியும் விஜய்க்கு இவ்வளவு கோபம் வருமா என்று. அவர்கள் எழுதியது விஜய்க்கு பிடிக்கவில்லை. மேலும் சில பொய்யான தகவலையும் அவர்கள் எழுதியிருந்தனர். எனவே தான் விஜய்க்கு அந்தவிற்கு கோபம் வந்தது. அவரின் கோபத்தை பார்த்து செட்டே அமைதியாகிவிட்டது என்றார் பேரரசு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.