டோக்கியோ,
ஜப்பான் பொதுவாக அமைதிக்கும் கட்டுப்பாடுக்கும் பெயர் பெற்ற நாடு. ஆனால் கடந்த வியாழன் அன்று, சர்ச்சைக்குரிய அகதிகள் மசோதா திருத்த சட்டம் ஜப்பான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபட்டபோது கைகலப்பு ஏற்பட்டது. ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த மசோதா, ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி மற்றும் இரண்டு எதிர்க்கட்சிகளான கட்சிகள் ஆகியவற்றால் ஆதரிக்கப்பட்டது.இருப்பினும், ஜப்பானின் அரசியலமைப்பு ஜனநாயகக் கட்சி மற்றும் ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை சட்டத்தை கடுமையாக எதிர்த்தன.
இந்நிலையில் ஜப்பான் நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய அகதிகள் மசோதா திருத்த சட்டம் நிறைவேற்றபட்டது.
இந்த மசோதா அகதிகளின் உரிமைகளைப் போதுமான அளவில் பாதுகாக்கவும், குடியேற்ற வசதிகளுக்குள் நிலைமைகளை மேம்படுத்தவும் தவறிவிட்டது என்று எதிர்கட்சியினர் குற்றம்சாட்டினர்.
ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மசோதாவை வாபஸ் பெறக் கோரியும், விரிவான விவாத நடத்தக்கோரியும் நாடாளுமன்றத்தை முடக்கினர்.