அச்சுறுத்தும் பிபர்ஜாய் புயல்… கொட்டித்தீர்க்கும் கனமழை… 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

அரபிக் கடலில் நிலைக் கொண்டிருக்கும் பிபர்ஜாய் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பிபர்ஜாய் புயல்தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள பிபர்ஜாய் ஒவ்வொரு நொடியும் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் இந்த புயல் அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் தீவிரமடைந்து வடக்கு-வடகிழக்கு நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
​ இவருக்கு 6 அடி உயரம் பத்தலயாம்… 8 இன்ச் கூட்ட ரூ. 88 லட்சம் செலவு செய்த இளைஞர்!​பெரிய அலைகள்பிபர்ஜாய் புயல் எதிரொலியாக, அரபிக் கடல் கடற்கரையில் வல்சாத் பகுதியில் உள்ள தித்தால் கடற்கரை கடும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. பல அடி உயரத்துக்கு அதிக அலைகள் எழுந்து அச்சுறுத்தி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஜூன் 14 ஆம் தேதி வரை தித்தல் கடற்கரை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
​ ஆசையை நிறைவேற்றாவிட்டால் ஆவியாக வருவேன்… மிரட்டிய மாமியார்… குஷ்பு செய்த காரியம்!​மஞ்சள் அலர்ட்இதனிடையே கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 7 முதல் 11 செ.மீ வரை மழை பெய்யும் என்றும் இந்திய வானிமை மையம் தெரிவித்துள்ளது.பலத்த காற்றுமேலும் 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் கடலோர பகுதிகளில் 55 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் செவ்வாய்க்கிழமை வரை அரபிக்கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
​ பத்திரிகையாளர் கேட்ட அந்த கேள்வி… படபடத்து போன உதயநிதி ஸ்டாலின்!​கனமழைஇந்த பிபர்ஜாய் புயல் காரணமாக குஜராத் மாநிலத்தின் கடலோர பகுதிகள் மற்றும் தெற்கு குஜராத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பலத்த காற்றுடன் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் பிபர்ஜாய் புயல் நேற்று மாலை வரை போர்பந்தரில் இருந்து தெற்கே அரபிக் கடலில் 740 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது.
​ திருவண்ணாமலை கிரிவலம் போறீங்களா? இனி பிரச்சனையே இல்லை!​பேரிடர் மீட்புப் படைபுயலை எதிர்க்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் புயல் குஜராத்தில் கரையை கடக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் குஜராத் கடலோர பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
​ ராமருக்கு மீசை இருக்குமா? கர்ணன் போல இருக்கார்… ஆதிபுருஷை விமர்சித்த கஸ்தூரி!​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.