சென்னை அரசு சொத்துக்களின் வாடகை பாக்கியை வசூலிக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசுக்குச் சொந்தமான ஒரு வணிக வளாகம் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பிரதான சாலையில் சேதமடைந்த நிலையில் இருந்ததால், அதை இடித்து விட்டு புதிதாகக் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதனால் வளாகத்தில் உள்ள கடைகளை காலி செய்யும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதை எதிர்த்து அங்குக் கடை நடத்தி வந்த அஷ்வக் அகமது, பவன்குமார் ஜெயின் ஆகியோர் […]