டெல்லி, கோபால் மற்றும் குவாலியர் நகரங்களில் கடந்த 5-ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் பள்ளி மாணவ, மாணவியருக்கான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டிலிருந்து ஒரு மாணவர் கூட கலந்து கொள்ளவில்லை.
இதற்கு முழுக்க முழுக்க காரணம் பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரிகள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை உடற்கல்வி ஆய்வாளர்களின் அலட்சியம் தான் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டுகின்றனர்.
தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 254 மாணவர்கள், 249 மாணவிகள் என 503 பேரை அனுப்பி வைக்கக் கோரும் கடிதங்கள் கடந்த மே 11-ஆம் தேதி முதலே தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரி நாகரத்தினத்திற்கு அந்தக் கடிதங்கள் சென்றதாகவும், அவற்றை அவர் பள்ளிக்கல்வித்துறை அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், அழைப்புக் கடிததங்களைப் பார்த்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை மேற்கொள்ளத் தவறியதால் தான் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டு மாணவர்களால் பங்கேற்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்திரையின் இந்த அலட்சிய போக்கால், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பொறியியல் பிரிவில் 500 இடங்கள், மருத்துவப் படிப்பில் 7 இடங்கள், பல் மருத்துவப் படிப்பில் ஓரிடம் வழங்கப்படும் வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.
இப்படியான ஒரு விவகாரத்தில், தவறு செய்தவர்கள் மீது இதுவரை எந்த ஒரு ஒரு நடவடிக்கையின் எடுக்கப்படாத நிலையில், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதற்க்கு மேலும் அலட்சியமான ஒரு விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.
அதில், தகவல் பரிமாற்ற குழப்பத்தால் இது நடந்து விட்டது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளப்படும். தீவிர விசாரணை செய்த பின் தான் கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேபோல், “தவறு நடந்துவிட்டது” என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷும் அலட்சியமான ஒரு பதிலையே தெரிவித்துள்ளார். என்ன நடவடிக்கை? யார் பொறுப்பு? என்ற எந்த விளக்கத்தையும் சொல்லாமல் “ஜஸ்ட் லைக் தட்” பாணியில் பதிலளித்து இருப்பது இந்த விவகாரத்தின் முக்கியம் அவர்களுக்கு புரியவில்லை என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.