இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பான நாடு என்பதை பிரச்சாரம் செய்ய 24 வயதான இளம்பெண் ஆஷா மால்வியா என்பவர் தன்னந்தனியாக சைக்கிளில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தி அருகே உள்ள நாதாராம் கிராமத்தைச் சேர்ந்த இவர், இதுவரை 21 மாநிலங்களுக்கு தனியாகவே சைக்கிளில் 17 ஆயிரத்து 250 கிலோமீட்டர் தூரம் வரை பயணித்துள்ளார். பெண்களின் பாதுகாப்பு, பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவை தமது விழிப்புணர்வு பிரச்சாரத்தின் நோக்கம் என்று கூறும் ஆஷா, இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பானது எனத் தெரிவித்தார்.