ஓவல் ,
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இந்தியாலண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நேற்று 3வது நாள் ஆட்டத்தில் இந்தியா 296 ரன்னுக்கு ஆட்டமிழந்தது
பின்னர் 173 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக வார்னர் , கவாஜா களமிறங்கினர். தொடக்கத்தில் வார்னர் சிராஜ் பந்துவீச்சில் 1ரன்களில் ஆட்டமிழந்தார்.
வார்னர் ஆட்டமிழக்கும் முன் அடுத்து களமிறங்க இருந்த மார்னஸ் லபுசேன் ஓய்வறையில் அசந்து தூங்கும் காட்சிகள் காட்டப்பட்டது. ஆனால் அவர் தூங்கி கொண்டிருக்கும் போதே சிராஜ் வார்னரின் விக்கெட்டை வீழ்த்தினார்.இதனால் இந்திய ரசிகர்களின் உற்சாகம் விண்ணை தொட்டது. ரசிகர்களின் கரகோஷத்தால் எழுந்த லபுஷேன், டேவிட் வார்னர் ஆட்டமிழந்ததை பார்த்து லபுசேன் உடனடியாக விழித்துக்கொண்டு பேட்டிங் செய்ய களமிறங்கினார்.
இந்த நிலையில் இது குறித்து லபுசேன் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது ,
“நான் ஒவ்வொரு பந்துகளுக்கு இடையில் என் கண்களை மூடி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன்,, எல்லா நேரத்திலும் நீங்கள் முழு விளையாட்டைப் பார்க்க முடியாது, ஆனால் நான் அங்கு வெகு சீக்கிரம் எழுந்தேன், சிராஜ் உடனடியாக வார்னரின் விக்கெட்டை வீழ்த்தி அதிக நேரம் ஒய்வு’எடுக்க விடாமல் செய்து விட்டார் , என ஜாலியாக பதிலளித்தார்.