ஒடிசாவில் விபத்து நேரிட்ட பகுதியான பஹநாகா பஜார் ரயில் நிலையத்திற்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், சிக்னல் கொடுக்கும் பேனலுக்கு சீல் வைத்து லாக் புத்தகத்தை பறிமுதல் செய்துள்ளனர். அந்த ரயில் நிலையம் முழுமையாக சி.பி.ஐ.யின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
விசாரணை தொடரும் நிலையில், அடுத்தகட்ட உத்தரவு வரும் வரை அங்கு ரயில்கள் நின்று செல்லக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 10 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.
இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களில் 82 பேரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் யார் என்பதை கண்டறிய டி.என்.ஏ மாதிரிகளை வழங்குமாறு அண்டை மாநிலங்களிடம் ஒடிஷா அரசு கோரிக்கை விடுத்துள்ளது.