குஜராத் மாநிலத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற கோவையைச் சேர்ந்த பயணிகளின் உடைமைகளை பைக்கில் வந்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, வாகராயம்பாளையம் புதூர், சந்திராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் தனியார் சுற்றுலா பேருந்தில் கடந்த 28ம் தேதி வடமாநில ஆன்மிக தலங்களான காசி, சாய்பாபா கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு 18 நாட்கள் ஆன்மிக பயணம் சென்றனர். கடந்த 7ம் […]