சென்னை அம்பத்தூரில் இயங்கி வரும் ஆவின் பால் பண்ணையில் ஹரிராம் என்கிற ஒப்பந்த பணி நிறுவனத்தின் மூலம் பள்ளியில் படிக்கும் சிறுவர், சிறுமிகள் குழந்தை தொழிலாளர்களா பணி அமர்த்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு மாத காலமாக பணியாற்றிய குழந்தை தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படாததால் குழந்தை தொழிலாளர்கள் ஆவின் நுழைவு வாயில் அன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்யக்கூடிய வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து விளக்கம் அளித்திருந்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் “ஆவின் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்படவில்லை. ஒப்பந்ததாரருக்கும் ஆவின் நிறுவனத்திற்கும் இடையே பண பட்டுவாடாவில் சில பிரச்சனைகள் இருந்து வருகிறது. அது கூடிய விரைவில் சரி செய்யப்படும்” என விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினிடம் ஆவின் பால் பண்ணையில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் “அது தவறான செய்தி, அன்றைய தினமே அத்துறை அமைச்சர் இது குறித்த விளக்கம் அளித்துள்ளார். இது திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்தி” என பதில் அளித்தார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டது குறித்து என வீடியோ ஆதரமாக வெளியாகி உள்ளது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அவர் “ஆதாரம் போலியாக தயாரித்து வெளியிட்டுள்ளனர். அதில் உண்மை இல்லை” என பதில் அளித்துள்ளார்.
குழந்தை தொழிலாளர்களாக பணியாற்றிய சிறுவர்களே நேரடியாக பேசிய வீடியோ வெளியாகியுள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இத்தகைய விளக்கம் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. தமிழக மு.க ஸ்டாலின் விளக்கம் அளித்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு இணையதள வாசிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
ஆவின் பத்தி Fakeகா ரெடி பண்ணி போட்டுட்டு இருக்காங்களாம் இப்படியா ஒரு முதல்வர் பதில் சொல்றது🤦🤦
முரட்டு முட்டு இதெல்லாம்🤷@Veera284 pic.twitter.com/v41I7QNPTq
— Voice Of Savukku Shankar (@voiceofsavukku) June 9, 2023