சாதனை மேல் சாதனை படைக்கும் 2018 படம்
இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ், குஞ்சாகா போபன், வினீத் சீனிவாசன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த திரைப்படம் 2018. கேரளாவில் 2018ல் ஏற்பட்ட பெரும் மழை வெள்ளம் பாதிப்பை மையப்படுத்தி இப்படம் வெளிவந்தது. படம் வெளியான முதலே பாராட்டுகளையும், வசூலையும் குவித்து வந்த இந்தப்படம் ஏற்கனவே உலகளவில் அதிகம் வசூலித்த மலையாள படமான புலி முருகன் படத்தின் சாதனையை முறியடித்தது. இப்போது மற்றொரு புதிய சாதனையை இப்படம் நிகழ்த்தியுள்ளது. இந்த படம் வெளியாகி 30 நாட்கள் கடந்த நிலையில் தற்போது உலகளவில் ரூ. 200 கோடி வசூலை எட்டியுள்ளது. இதுவே மலையாள சினிமாவின் முதல் ரூ. 200 கோடி வசூலித்த படம் என்று ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.