தற்கொலைக்கு தடைவிதித்த கிம் ஜாங் "தேச துரோக குற்றமாக அறிவிப்பு"

சியோல்:

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது நாட்டில் தற்கொலைக்கு தடை விதித்துள்ளார். தற்கொலையை தேசத்துரோகக் குற்றமாகக் கருதி கிம் ரகசிய உத்தரவை பிறப்பித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிம் அரசு அதிகாரிகள் தங்கள் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தற்கொலைகளை தடுக்க உத்தரவிட்டுள்ளார்.

நாடு கடுமையான பொருளாதார சவால்களை சந்தித்து வருகிறது. இதனால் பொருளாதார நெருக்கடியால் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து தற்கொலைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக தென்கொரிய ரகசிய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.கடந்த ஆண்டை விட பட்டினியால் ஏற்படும் மரணங்கள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை விவரிக்கிறது. சோங்ஜின் நகரம் மற்றும் கியோங்சாங் கவுண்டியில் மட்டும் இந்த ஆண்டு 35 தற்கொலைகள் பதிவாகியுள்ளன.

வடகொரியாவில் கடந்த ஆண்டை விட பொருளாதார நெருக்கடி தற்போது மோசமடைந்ததை. மக்கள் படும் கஷ்டங்களையும் துன்பங்களையும் தீர்க்க முடியாமல் உள்நாட்டில் பல பிரச்சினைகள் இருப்பதாக தென்கொரிய தேசிய புலனாய்வு சேவையின் அதிகாரி ஒருவர் விளக்கமளிக்கிறார்.

இதனால் தான் தற்கொலைக்கு தடை விதித்து ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உயர் அதிகாரிகளின் அவசர கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ரேடியோ பிரீ ஏசியா தெரிவித்துள்ளது.

அதிகப்படியான குடிப்பழக்கம் மற்றும் ஒழுங்கற்ற வாழ்க்கை முறை காரணமாக கிம்மின் உடல் எடை 140 கிலோவாக கூடி உள்ளது. மே 16 அன்று, அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி தொடர்பான படங்கள் வெளியாகி இருந்தன.இதில் சோர்வாக இருக்கும் கிம்மை காண முடிந்தது.

கிம் உடல்நலம் சரியில்லாமல் இருப்பதாக பரவலான செய்திகளை தொடர்ந்து அவர் பிப்ரவரி முதல் ஒரு மாதமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.