துருக்கி அரசுக்குச் சொந்தமான ஆயுத தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் சிக்கி ஊழியர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.
ராக்கெட் ஏவுகணைகளும், வெடிகுண்டுகளும் தயாரிக்கப்பட்டுவந்த தொழிற்சாலையில், வல்லுனர்கள் டைனமைட் வெடிமருந்தை வைத்து பரிசோதனை மேற்கொண்டபோது திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வெடி விபத்தினால் ஏற்பட்ட அதிர்வுகளால் அருகே உள்ள வீடுகளில் கண்ணாடி ஜன்னல்கள் சிதறி உடைந்தன.
காயமடைந்தவர்களில் சிலர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.