தேனிலவுக்கு சென்ற புதுமண தம்பதி.. போட்டோ ஷூட்டால் நேர்ந்த வினை .. சோகத்தில் குடும்பத்தினர்.!

இந்தோனேஷியாவிற்கு டிடிவிளக்கு செய்த புதுமண தம்பதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பூந்தமல்லி அடுத்த சென்னீர் குப்பத்தை சேர்ந்தவர் மருத்துவர் விபூஷ்னியா. இவருக்கும் சென்னையை சேர்ந்த மருத்துவர் லோகேஸ்வரன் என்பவருக்கும் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி தடபுடலாக திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த கையோடு இருவரும் இந்தோனேசியாவிற்கு தேனிலவு சென்றனர். இதில் இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் கடலில் இருவரும் மோட்டார் படகில் சென்ற போது போட்டோ சூட் நடத்தியுள்ளனர். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் போட்டியில் இருந்து இருவரும் நீரில் விழுந்து மூழ்கினர். 

இதனையடுத்து உடனடியாக அங்கு இருந்தவர்கள் தம்பதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், லோகேஸ்வரன் மட்டும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் விபூஷ்னியாவின் உடலைத் தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து இந்திய, தமிழக அரசு மற்றும் அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த தம்பதியினரின் சடலங்களை இந்தியாவிற்கு எடுத்து வருவது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.