புதுடெல்லி,
நடுத்தர வர்க்க மக்களின் கனவுகளை நிறைவேற்றியவர் பிரதமர் மோடி என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். இது தொடர்பாக அமித்ஷா கூறியதாவது: மத்தியில் மோடி அரசு ஆட்சி அமைத்து கடந்த ஒன்பது ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கியுள்ளது. குறிப்பாக நடுத்தர மக்களின் தேவைகளை பிரதமர் மோடி பூர்த்தி செய்துள்ளார்.
குழந்தைகளுக்கு புதிய கல்வி நிறுவனங்கள், மானிய விலையில் வீடுகள், லட்சக்கணக்கான வேலைகள் என நடுத்தர வர்க்கத்தின் கனவுகளை நிறைவேற்றியதோடு, அவர்களின் நிதிநிலையும் வேகமாக வளர்ந்துள்ளது. வரி தள்ளுபடி, காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மலிவான பயணத்திலிருந்து மலிவு மருத்துகள் வரை நடுத்தர வர்க்கத்தின் கனவுகளை நிறைவேற்றியவராக பிரதமர் மோடி உள்ளார்” என்றார்.