அரபிக்கடலில் உருவாகியுள்ள பிபர்ஜாய் புயல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. மேற்கு கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரள மாநிலத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. மழைக் காரணமாக அம்மாநிலத்தின் ஆலப்புழா, பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் தெற்கு குஜராத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை மையம், பலத்த காற்று வீசும் என்றும் தெரிவித்துள்ளது.
2வது திருமணத்திற்கு தடையாய் இருந்த 6 வயது மகள்… கோடரியால் வெட்டி கொன்ற கொடூர தந்தை!
பல அடி உயரத்துக்கு அலைகள் எழுந்து வருவதால் அம்மாநிலத்தின் தித்தல் பீச்சுக்கு செல்ல மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிபர்ஜாய் புயல் தற்போது கராச்சிக்கு தெற்கே சுமார் 910 கிமீ தொலைவில் உள்ளது. இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த புயல் அடுத்த மூன்று நாட்களில் படிப்படியாக வடக்கு-வடமேற்கு நோக்கி நகரும் என கூறப்படுகிறது. இந்நிலையில் பிபர்ஜாய் புயலின் கண் பகுதி தெரிய ஆரம்பித்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர். அதன்படி வெதர் ஃபோர்கேஸ்டர் பதிவிட்டுள்ள டிவிட்டில், இறுதியாக பிபர்ஜாய் புயலின் மேற்பரப்பிலிருந்து மங்கலான கண் வெளிப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
கல்யாணம் ஆகாமல் இருந்திருந்தால் தனுஷ்தான் என் கணவர்… மிரள வைத்த சீரியல் நடிகை!
இந்த புயல் குஜராத் கடற்கரைக்கு அருகில் மிகவும் தீவிரமான புயல் ஆகலாம், எனவே எச்சரிக்கையாக இருங்கள் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் ஜூன் 15 மற்றும் 16 தேதிகளில் எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் மற்றும் குஜராத் இடையே இந்த புயல் கரையை கடக்கலாம் என்றும் வெதர் ஃபோர்கேஸ்டர் தளம் தனது பதிவில் தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்த பிபர்ஜாய் புயல் காரணமாக இந்திய கடலோர காவல்படை வடமேற்கு, குஜராத், டாமன் மற்றும் டையூவில் உள்ள மீனவர்கள் மற்றும் கடற்படையினர் உள்ளிட்டோருக்கு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தி வருகிறது. இந்திய கடலோர காவல்படை பிரிவுகள் கப்பல்கள், விமானம் மற்றும் ரேடார் நிலையங்கள் மூலம் கடலில் உள்ள கப்பல்களுக்கும் புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை ஆலோசனைகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
புதுமண தம்பதியா நீங்க? இனி ரயில்லேயும் வளைச்சு வளைச்சு போட்டோ எடுக்கலாம்!