விஜயபாகு காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகமாக கடந்த செவ்வாய்க்கிழமை (6) தனது புதிய அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது கடமைகளை பொறுப்பேற்றார்.
மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் சுப நேரத்தில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு, அவர் தனது புதிய நியமனத்தை ஏற்றுக்கொண்டார்.
மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் தற்போது இலங்கை இராணுவத்தின் பொதுப்பணி பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த புதிய பதவிக்கு முன்னர், மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றினார்.
இந் நிகழ்வில் நிறைவேற்று பணிப்பாளர் கிளையின் பணிநிலை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.