மும்பையின் பல்வேறு இடங்களில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 50 கோடி ரூபாய் மதிப்பிலான 20 கிலோ மெஃபெட்ரான் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
முக்கிய போதைபொருள் கும்பலை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1 கோடியே 10 லட்சம் ரூபாயும், 187 கிராம் எடையிலான தங்க ஆபரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
3 பேர் மீதும், போதை மருந்துகள் தடை சட்டம் 1985-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு போதை மருந்துகளை விநியோகித்தது யார், அவர்கள் யாருக்கு விற்பனை செய்ய முயன்றார்கள் என்பன தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.