லண்டன்,
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 3-வது நாள் அட்டத்தில் ஆஸ்திரேலியா, இந்திய அணியை 296 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்தது. முன்னதாக ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் குவித்திருந்தது, இதை எடுத்து 173 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கியது.
ஆஸ்திரேலிய அணியில் தொடக்கத்தில் வார்னர்(1) மற்றும் கவாஜா(13) அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய ஸ்மித் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜாவிடம் விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து களம் இறங்கிய டிராவிஸ் ஹெட் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்திருந்த நிலையில் இந்த முறை 18 ரன்களில் ஜடேஜா வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். தற்போது ஆஸ்திரேலிய அணி மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் 4வது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
Live Updates
-
10 Jun 2023 12:14 PM GMT
முதல் ஓவரில் பவுண்டரி அடித்தார் ஸ்டார்க்
உணவு இடைவேளைக்கு பின் முதல் ஓவரில் பவுண்டரி அடித்தார் ஸ்டார்க்
-
10 Jun 2023 11:33 AM GMT
ஆஸி. 2வது இன்னிங்ஸ் 70 ஓவர்கள் முடிவில் 201/6
ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் இதுவரை 70 ஓவர்கள் ஆடி 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்துள்ளது. மொத்தமாக இதுவரை 374 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
-
10 Jun 2023 11:08 AM GMT
350 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா..!
350 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா..!
-
10 Jun 2023 11:01 AM GMT
கேமரூன் க்ரீனை போல்டாக்கினார் ரவீந்திர ஜடேஜா..!
நிதானமாக ஆடி வந்த க்ரீன் 95 பந்தில் 25 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
-
10 Jun 2023 10:34 AM GMT
ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 150 ரன்களை கடந்தது
ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 150 ரன்களை கடந்தது. இதுவரை 329 ரன்கள் முன்னிலை.
-
10 Jun 2023 10:18 AM GMT
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஹர்பஜன் சிங்குடன் ரவீந்திர ஜடேஜா…!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும் லண்டன் ஓவல் மைதானத்தில் ஜடேஜா ஹர்பஜன் சிங்குடன் பேசினார்.
-
10 Jun 2023 10:11 AM GMT
52 ஓவர் முடிவில் ஆஸி. 142/5
ஆஸ்திரேலிய அணி இதுவரை 315 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.