வாஷிங்டன்: யானையுடன் காண்டா மிருகம் ஒன்று சண்டையிட்டுக் கொள்ளும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகிறது. நெட்டிசன்கள் இந்த வீடியோவை வைத்து தங்களுக்கே உரிய பாணியில் ஜாலியாக பதிவிட்டு வருகின்றனர்.
வனவிலங்குகளின் நடவடிக்கைகள் எப்போதும் சமூக வலைத்தளங்களில் அதிகம் கவனம் ஈர்க்கும். காட்டில் கம்பீரமாக வலம் வரும் விலங்குகள் ஒன்றுக்கொன்று கொஞ்சி குலாவுவது, சண்டையிட்டுக் கொள்வது என அனைத்தும் ரசிகக்கும் படியாகவே இருக்கும். வைல்டு லைப் குறித்த சேனல்களைக் கூட மக்கள் பலரும் அதிகம் விரும்பி பார்க்கின்றனர்.
அதெபோல், வனவிலங்குகள் குறித்த வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது அதிகம் பரவி நெட்டிசன்களை ஈர்க்கும். அந்த வகையில், இணையத்தில் தற்போது ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. ஐஎப்எஸ் அதிகாரி சுஷந்தா நந்தா தனது ட்விட் பதிவில், கிளாஷ் ஆப் தி டைட்டன்ஸ் என அடைமொழி கொடுத்து வீடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தார்.
அந்த வீடியோவில், மிருகங்களில் மிகவும் வலுமிக்க விலங்குகளாக கருதப்படும் யானையும் காண்டா மிருகமும் நேருக்கு நேர் மோதிக்கொள்கின்றன. யானை அதற்கே உரிய கம்பீரத்துடனுடம் அதன் பெரிய உருவ அமைப்புடனும் வந்தாலும் அதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப் படாத காண்டா மிருகம், ‘வா மோதிப் பார்க்கலாம்’ என்ற ரீதியில் நேருக்கு நேராக மல்லுக்கட்டுகிறது.
முதலில் யானையைக் கண்டு சற்று அஞ்சும் காண்டா மிருகம் பிறகு அதனுடன் சண்டைக்கு செல்கிறது. பொறுத்து பார்த்த யானையோ அதன் முழு பலத்தைக் கொண்டு ஆக்ரோஷமாக காண்டா மிருகத்தை முட்டுகிறது. இதில் கீழே விழுந்த காண்டா மிருகமோ… அப்பாடா ஆளை விட்டால் போதும் என்ற ரீதியில் பின்னங்கால் பிடறி அடிக்க ஓடுகிறது. வனவிலங்குகள் மோதிக்கொள்ளும் இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என்ற விவரம் இல்லை.
நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவிற்கு கீழே சுவாரசியமாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் ஒரு நெட்டிசன் கூறுகையில், இந்த காண்டா மிருகம் போதையில் இருந்ததோ என்னமோ… யானையுடன் மோதிவிடலாம் என்ற எண்ணம் அதனால் தான் வந்து இருக்கும் என ஜாலியாக பதிவிட்டு இருக்கிறார். அதேபோல், ஒரு நெட்டிசன் உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இதுதான் நடக்கிறது அர்த்தம் தொனிக்க பதிவிட்டு இருக்கிறார்.
அதேபோல், மற்றொரு நெட்டிசன் கூறும் போது, வழக்கமாக , யானைகளை பார்த்தாலே காண்டா மிருகங்கள் ஒதுங்கி போய்விடும். ஆனால் இது எப்படி சண்டைக்கு தயாரானது என்று ஆச்சர்யமாகவே உள்ளது” என பதிவிட்டு இருக்கிறார். யானையும் காண்டா மிருகமும் சண்டை போட்டுக்கொள்ளும் இந்த நிகழ்வு, நமீபியாவில் நடைபெற்றதாக இருக்கலாம் என சில நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.