வாஷிங்டன்: வானத்தில் இருந்து ஏதோ ஒரு பொருள் விழுவதையும் அங்கு ராட்சத உயரத்தில் இருவர் தெரிந்ததாகவும் காவல் துறையில் அமெரிக்கர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வேற்றுகிரகத்தில் யாராவது வசிப்பார்களா என்ற சந்தேகம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதிலும் ஏலியன்கள் எப்படி இருப்பார்கள், மனிதர்களை போலவே இருப்பார்களா, இல்லை வேறு மாதிரி இருப்பார்களா என்ற சந்தேகமும் உள்ளது.
மேலும் திரைப்படங்களில் பார்த்துதான் ஏலியன்கள் இப்படி இருப்பார்களோ என நினைக்க தோன்றுகிறது. இவர்கள் தங்களது பறக்கும் தட்டுகளில் பூமியை அவ்வப்போது வந்து பார்த்து செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் மூன்று மர்ம பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை யாருடையது என தெரியவில்லை. சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த பாகங்களை தேடி சேகரித்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது அமெரிக்க ராணுவம். இந்த நிலையில் அமெரிக்காவை இந்த மர்மபொருட்கள் மூலம் ஏலியன்கள் உளவு பார்க்கிறார்களா என்ற சந்தேகமும் எழுந்தது.
அப்படியிருக்கும் நிலையில் மீண்டும் ஏலியன்கள் குறித்த தகவலால் அமெரிக்காவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 30ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நொவாடாவில் ஒரு நபர் இரவு நேரத்தில் வானத்தில் ஒரு பிரகாசமாக நகர்ந்ததாகவும் அவர் காவல் துறையில் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வானத்தில் இருந்து ஏதோ ஒன்று விழுவதைதான் பார்த்ததாகவும் தனது வீட்டின் பின்புறத்தில் 2 உருவங்களின் அசைவு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த உருவங்கள் 8 அடி உயரம் மற்றும் 10 அடி உயரங்களில் இருந்தன எனறும் தெரிவித்துள்ளார்.

அந்த உருவங்களுக்கு பளபளப்பான கண்களும் பெரிய அளவிலான வாய் இருந்ததாகவும் கூறுகிறார். இதுகுறித்து அந்த நபர் கூறுகையில் நான் பார்த்தவர்கள் பெரிய கண்களை கொண்டிருந்தனர். மனிதர்கள் போல் அவர்கள் இல்லை. 8 அடி முதல் 10 அடி உயரம் வரை இருந்தனர். நான் காமெடிக்காக இதை சொல்லவில்லை. நான் சொல்வது சத்தியம் என கூறியுள்ளார்.
பறக்கும் தட்டுகளையும் வேற்றுகிரகவாசிகளையும் நேரில் பார்த்ததாக மக்கள் பலர் குற்றம்சாடடியுள்ளனர். இதற்காக அமெரிக்கா மேலும் பல ஆராய்ச்சிகளை நடத்த முடிவு செய்துள்ளது. அது போலீஸ்காரர் ஒருவர் கூறுகையில் வானத்தில் அதிக வெளிச்சமான ஒரு பொருளை தான் பார்த்ததாகவும் அதே பொருளை தனது குடும்பத்தை சேர்ந்த இருவர் பார்த்தாகவும் தெரிவித்தார். அது போல் உருவங்களை பார்த்ததாகவும் அவை 10 அடி உயரத்திலும் மிகப் பெரிய படைப்பாகவும் இருந்ததாக தெரிவித்துள்ளார்.