சீனாவின் மொபைல் நிறுவனமான Xiaomi India வின் முன்னாள் மேலாண் இயக்குனர் மனு குமார் ஜெயின், தலைமை நிதி அதிகாரி சமீர் பி.ராவ் மற்றும் மூன்று வங்கிகளுக்கு அந்நிய செலாவணி சட்ட விதிகளை மீறியதற்காக அமலாக்கத்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
5 ஆயிரத்து 551 கோடி ரூபாய் தொடர்புடைய அந்நியச் செலாவாணி முறைகேடு தொடர்பாக சிட்டிபேங்க், டச்சு வங்கி மற்றும் ஹெச்எஸ்பிசி ஆகிய மூன்று வங்கிகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சீன மொபைல் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் கடந்த பிப்ரவரி மாதத்தில் முடக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.