வி.மைத்ரேயன் ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்து வந்தவர். அரசியல் வாழ்விற்கு அச்சாரம் போட்டதே இங்கிருந்து தான். தீவிர இந்துத்துவா சிந்தனையாளராக வளர்ந்த மைத்ரேயன், அதன்பிறகு பாஜகவில் இணைந்து பொது வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார். பிராமின் லாபியால் படிப்படியாக வளர்ந்தார். டெல்லி தலைமையும் பிராமணர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தே பாஜகவை வளர்த்தெடுக்கும் வேலைகளில் ஈடுபட்டது.
அதிமுகவில் சசிகலாவுக்கு என்ன ரோல்? மைத்ரேயன் பேட்டி!
பிராமின் லாபி
அதாவது, எந்த ஒரு முக்கியப் பொறுப்பாக இருந்தாலும் கட்டாயம் பிராமணர்கள் இடம்பெறுவர். அதில் தமிழகமும் விதிவிலக்கல்ல. அந்த வகையில் பாஜக மாநில பொதுச் செயலாளர், துணைத் தலைவர், கட்சியின் மாநிலத் தலைவர் என அடுத்தடுத்து உயர் பதவிகளுக்கு சென்றார். இந்த சூழலில் 2000ஆம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார். அவரது தயவால் மூன்று முறை மாநிலங்களவை எம்.பியாக இருந்தார்.
அதிமுகவில் சிக்கல்
ஜெயலலிதாவிற்கு மறைவு அதிமுகவை பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாக்கியது.
, டிடிவி தினகரன்,
,
ஆகியோருக்கு இடையில் தொண்டர்கள் பந்தாடப் பட்டனர். ஒருவழியாக அதிமுக இரட்டை தலைமைக்கு கீழ் வந்தது. அதில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக மைத்ரேயன் இருந்தார். திடீரென எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவினார்.
ஓபிஎஸ் டூ ஈபிஎஸ்
ஆனால் அங்கு மைத்ரேயனுக்கு எந்த ஒரு முக்கிய பதவியும் கிடைக்கவில்லை. பின்னர் மீண்டும் ஓபிஎஸ் அணிக்கு சென்றார். தனது கைக்கு அதிகாரம் படிப்படியாக நகர்ந்து கொண்டிருந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபரில் அதிமுகவில் இருந்து மைத்ரேயனை நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்தார். இந்த சூழலில் பாஜகவிற்கு தூது அனுப்பி வந்தார்.
அண்ணாமலை அதிரடி
அங்கே தனது அரசியல் வாழ்க்கைக்கு நல்ல பாதை அமைத்து தருவார்கள் என எதிர்பார்த்தார். தமிழக பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை அதிரடி அரசியலை மேற்கொண்டு வருகிறார். கட்சியில் சீனியர்களை ஓரங்கட்டி விட்டு புது ரத்தம் பாய்ச்சியதை போல வேகம் காட்டி கொண்டிருக்கிறார். இந்த விஷயத்தில் டெல்லியும் இசைந்து கொடுக்க சீனியர்கள் சைலண்ட் மோடிற்கு சென்றனர்.
டெல்லிக்கு சிக்னல்
எனவே சென்னையில் வேலை ஆகாது, நேரடியாக டெல்லி சென்று விட வேண்டியது தான் என்று பாஜக மேலிடத்தின் தயவை எதிர்பார்த்து மைத்ரேயன் காத்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் டெல்லியில் முகாமிட்டிருந்த மைத்ரேயன், பாஜகவில் இணைய அனைத்து ஏற்பாடுகள் தயாராக இருந்தன. ஆனால் பெருந்தலைகள் முன்னாள் தான் இணைவேன் எனக் கண்டிஷன் போட்டதாக சொல்லப்படுகிறது.
இருந்தாலும் அதிருப்தி
இதனால் ஏற்பட்ட சலசலப்பால் இணைப்பை ஒத்திவைத்து விட்டனர். இந்த சூழலில் காலம் கனிந்தது என்பது போல், டெல்லி சிக்னல் தர மைத்ரேயன் புறப்பட்டு சென்றார். இருப்பினும் அவர் எதிர்பார்த்தது போல் முக்கியத் தலைகள் இல்லை. பாஜக தேசிய பொதுச் செயலாளர்கள் சி.டி.ரவி, அருண் சிங் உள்ளிட்டோர் தான் இருந்தனர். இதனால் ஒருவித அதிருப்தி உடனேயே கட்சியில் கைகோர்த்து கொண்டதாக தெரிகிறது. அவர் எதிர்பார்த்த விஷயங்கள் பாஜகவில் நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.