‛வேட்டையாடு விளையாடு' ரீ ரிலீஸ் அப்டேட்
கடந்த 2006ம் ஆண்டில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த திரைப்படம் வேட்டையாடு விளையாடு. ஜோதிகா, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். செவந்த் சேனல் தயாரித்த இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் இப்படம் ஜூன் மாதம் மீண்டும் டிஜிட்டல் முறையில் ரீ மாஸ்டர் செய்து வெளியாகும் என்று அறிவித்தனர். இந்த நிலையில் வேட்டையாடு விளையாடு திரைப்படம் வருகின்ற ஜூன் 23ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகுமென்று அதிகாரப்பூர்வமாக புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.