சென்னை: Anjali (அஞ்சலி) தனது திருமணம் குறித்து நடிகை அஞ்சலி மனம் திறந்து பேசியிருக்கிறார்.
கற்றது தமிழ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அஞ்சலி. ராம் இயக்கி ஜீவா நடித்திருந்த அந்தப் படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். அந்தக் கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்தியிருந்த நடிப்பு க்ளாசிக்காக இருந்ததை அடுத்து முதல் படத்திலேயே மிகச்சிறந்த நடிகை என்ற பெயரைப் பெற்றார் அஞ்சலி.
முன்னணி நடிகை: இதனையடுத்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் ஏராளம் வர ஆரம்பித்தன. அதன்படி அங்காடித் தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, சேட்டை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தார். ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய அழகை மெருகேற்றிக்கொண்டே சென்ற அஞ்சலி மிகச்சிறந்த நடிகை என்ற பெயரை பெற்றார். மேலும் தமிழில் மிகப்பெரிய ரவுண்டு வருவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டார்.
காணாமல் போன அஞ்சலி: இந்தச் சூழலில் திடீரென அஞ்சலியை சுற்றி சில சர்ச்சைகள் எழுந்தன. இதன் காரணமாக தமிழ் சினிமாவிலிருந்து சில காலம் காணாமல் போனார். அதனையடுத்து சிங்கம் 2 படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி ரீ என்ட்ரி கொடுத்த அஞ்சலி அடுத்ததாக ஜெயம் ரவியுடன் சகலகலா வல்லவன் உள்ளிட்ட படத்தில் நடித்தார். இருப்பினும் அவருக்கு பழையபடி வாய்ப்புகள் சரளமாக கிடைக்கவில்லை
ராம் இயக்கத்தில்: அவர் இப்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை நடித்திருக்கிறார். கற்றது தமிழ் படம் மூலம் எப்படி தன்னை மிகச்சிறந்த நடிகையாக அடையாளப்படுத்தினாரோ அதேபோல் ஏழு கடல் ஏழு மலை படமும் தனக்கு மிகச்சிறந்த அடையாளத்தை பெற்றுக்கொடுக்கும். இதன் மூலம் அடுத்த ரவுண்டு வரலாம் என்ற நம்பிக்கையில் அஞ்சலி இருக்கிறார்.
ஜெய்யுடன் காதல்: இதற்கிடையே எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தபோது நடிகர் ஜெய்யுடன் அஞ்சலி காதலில் விழுந்ததாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி திருவான்மியூர் கடற்கரையில் ஒரு அப்பார்ட்மெண்ட்டை வாங்கி அங்கு இருவரும் சில காலம் ஒன்றாக தங்கியிருந்ததாகவும், பிறகு ஏற்பட்ட பிரச்னையால் அந்த வீட்டை அஞ்சலி காலி செய்துவிட்டார் என்று கோலிவுட்டில் தகவல் தீயாக பரவியது.
திருமணம் குறித்து அஞ்சலி: இந்நிலையில் தனது திருமணம் குறித்து அஞ்சலி பேசுகையில், “பெண்களை மதிக்கத்தெரிந்த ஒருவரைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன். அவர் திருமணம் முடிந்த பிறகும் என்னை மரியாதையாக நடத்தும் நபராக இருக்க வேண்டும். இதற்குப் பிறகுதான் அன்பு, காதல் எல்லாமும். அப்படி ஒரு பையன் கிடைக்கட்டும்” என்றார். அவரது பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.