இலவச நெட்ஃபிக்ஸ்: ஓடிடி பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி!! நீங்கள் ஜியோ ஃபைபரைப் பயன்படுத்தி, ஓடிடி இயங்குதளங்களின் சந்தாவைத் தனியாகப் பெற்றுக்கொண்டிருந்தால், இப்போது நீங்கள் அவ்வாறு செய்யத் தேவையில்லை. இப்படிப்பட்ட வாடிக்கையாளர்களுக்காக, ஜியோ ஃபைபரின் சில அற்புதமான திட்டங்கள் உள்ளன. இவை வாடிக்கையாளர்களுக்கு அதிவேக இணைய வசதியை வழங்குவது மட்டுமல்லாமல் ஓடிடி -இன் மகிழ்ச்சியையும் தருகின்றன. ஜியோ ஃபைபரின் இது போன்ற சில சிறந்த திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
JioFiber வழங்கும் 1,499 ரூபாய் திட்டம்
JioFiber இன் ரூ. 1,499 திட்டத்தில் 300எம்பிபிஎஸ் வேகத்தை வாடிக்கையாளர்கள் பெறலாம். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி, சோனிலிவ், ஜீ5, சன் நெக்ஸ்ட், வூட் செலக்ட், வூட் கிட்ஸ், ஏஎல்டிபாலாஜி, ஹோய்சோய், ஷோமாரூமி, லயன்ஸ்கேட் ப்ளே (Netflix, Amazon Prime Video, Disney + Hotstar VIP, SonyLIV, Zee5, Sun NXT, Voot Select, Voot Kids, ALTBalaji, Hoichoi, Shemarumi, Lionsgate Play) போன்ற சேவைகள் உட்பட பல ஓடிடி இயங்குதளங்களுக்கு இலவச அணுகல் கிடைக்கும்.
இந்த திட்டம் 30 நாட்கள் செல்லுபடியாகும், அதாவது திட்டத்தின் மூலம் கிடைக்கும் ஓடிடி இயங்குதளங்களுக்கான அணுகல் 30 நாட்களுக்கு இருக்கும். வாடிக்கையாளர்கள் அமேசான் பிரைமுக்கான அணுகலை ஆண்டு முழுவதும் பெறலாம். மேலும் இதில் வாடிக்கையாளர்களுக்கு இலவச/அன்லிமிடெட் குரல் அழைப்பும் கிடைக்கும்.
JioFiber வழங்கும் 2,499 ரூபாய் திட்டம்
JioFiber இன் ரூ. 2,499 திட்டத்தில் 500 எம்பிபிஎஸ் வேகத்தை வாடிக்கையாளர்கள் பெறலாம். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி, சோனிலிவ், ஜீ5, சன் நெக்ஸ்ட், வூட் செலக்ட், வூட் கிட்ஸ், ஏஎல்டிபாலாஜி, ஹோய்சோய், ஷோமாரூமி, லயன்ஸ்கேட் ப்ளே (Netflix, Amazon Prime Video, Disney + Hotstar VIP, SonyLIV, Zee5, Sun NXT, Voot Select, Voot Kids, ALTBalaji, Hoichoi, Shemarumi, Lionsgate Play) போன்ற சேவைகள் உட்பட பல ஓடிடி இயங்குதளங்களுக்கு இலவச அணுகல் கிடைக்கும். மேலும் இதில் வாடிக்கையாளர்களுக்கு இலவச/அன்லிமிடெட் குரல் அழைப்பும் கிடைக்கும்.
JioFiber வழங்கும் 3,499 ரூபாய் திட்டம்
JioFiber வழங்கும் ரூ. 3,499 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 1gbps வேகம் கிடைக்கும். இந்த திட்டத்தில் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட பல ஓடிடி இயங்குதளங்களுக்கான இலவச அணுகலை வாடிக்கையாளர்கள் பெறலாம். இந்த திட்டமும் 30 நாட்களுக்கு செல்லுபடி ஆகும்.
JioFiber வழங்கும் 8,499 ரூபாய் திட்டம்
JioFiber வழங்கும் 8,499 ரூபாய் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 1gbps வேகம் கிடைக்கும். மேலும் 6600 ஜிபி டேட்டாவும் இதில் கிடைக்கும். இலவச வரம்பற்ற அழைப்புடன், நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட பல ஓடிடி தளங்களுக்கான இலவச அணுகல் இந்த திட்டத்தில் கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டியும் 30 நாட்களாக இருக்கும்.