‘விக்ரம்’ படத்திற்கு பிறகு
கமல்
நடிப்பில் தற்போது ‘இந்தியன் 2’ படம் உருவாகி வருகிறது. நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மும்முரமாக நடந்து வருகிறது. இந்தியன் 2, கேம் சேஞ்சர் என மாறி மாறி ஷுட்டிங்கை நடத்தி வந்தார் ஷங்கர்.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
‘இந்தியன் 2’ படப்பிடிப்பு கடந்த சில வருடங்களாகவே நடந்து வந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு படப்பிடிப்பு நடந்த சமயத்தில் அங்கிருந்த கிரேன் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து மூன்று தொழிலாளர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்து, கொரோனா, ஊரடங்கு போன்ற காரணங்களால் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தடைப்பட்டது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இதனையடுத்து ஷங்கர் தனது அடுத்தடுத்த படங்களில் பிசியானார். அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய போவதாக அறிவித்தவர், தெலுங்கில் ராம்சரனை வைத்து புதிய படத்தை துவங்கினார். கமலும் புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதனிடையில் லைகா நிறுவனம் ஷங்கர் ‘இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் வேறு படங்களை இயக்கக்கூடாது என வழக்கு தொடர்ந்தது.
இதனையடுத்து பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக இதன் ஷுட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. லைகாவுடன் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து இந்தப்படத்தை தயாரித்து வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.
Prabhu Deva: மீண்டும் அப்பாவான நடிகர் பிரபு தேவா.. மகிழ்ச்சியில் மொத்த குடும்பம்..!
இந்நிலையில் ‘இந்தியன் 2’ படம் குறித்து வலைப்பேச்சு வீடியோவில் பேசப்பட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இந்தப்படத்தில் வரும் வயதான கேரக்டருக்காக கமல் தினமும் நான்கு மணிநேரம் மேக்கப் போடுகிறாராம். இந்த மேக்கப் ஆறு மணிநேரம் மட்டுமே இருக்கும் என்பதால் அதற்குள் படப்பிடிப்பையும் நிறைய செய்ய வேண்டுமாம். மேலும் இந்த மேக்கப்பில் இருக்கும் போது திட உணவு எதுவும் எடுத்துக்கொள்ள முடியாதாம்.
இடையில் ஜுஸ் போன்ற திரவ உணவு மட்டுமே எடுத்துக்கொள்ள முடியுமாம். கமல் இந்த வயதில் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு நடிப்பது மொத்த குழுவுக்குமே ஆச்சரியமாம். இந்நிலையில் தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் கமலின் போர்ஷன் கிட்டத்தட்ட முடிந்துள்ளதால் மொத்த படக்குழுவும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளதாம். வலைப்பேச்சு அந்தணன் பகிர்ந்துள்ள இந்த தகவல் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு எகிற செய்துள்ளது.
Thangalaan: விபத்துக்கு பிறகு மீண்டும் பார்முக்கு திரும்பிய விக்ரம்: வெறித்தனமான ‘தங்கலான்’ லுக்.!