Mahindra BE.05 Suv spied – மஹிந்திரா பிஇ.05 எலக்ட்ரிக் எஸ்யூவி சோதனை ஓட்ட படங்கள்

முதன்முறையாக கேமரா கண்களில் சிக்கியுள்ள மஹிந்திரா BE.05 மாடல் ஏறக்குறைய கான்செப்ட்டை போன்றே அமைந்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் எதிர்பார்க்கப்படுகின்ற இந்த கார் அதிநவீன அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

மஹிந்திரா நிறுவனம் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல்களுக்கு என BE (Born Electric) மற்றும் XUV.e என்ற பெயர்களில் எதிர்கால மாடல்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. சென்னை அருகே சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது.

Mahindra BE.05

கடந்த ஆண்டு காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்ட் அடிப்படையில் அமைந்துள்ள பிஇ.05 எலக்ட்ரிக் எஸ்யூவி கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக அமைந்திருந்தாலும். உற்பத்திக்கு ஏற்ற சில மாறுதல்களையும் பெற்றதாக அமைந்துள்ளது.

கான்செப்ட்டில் இடம்பெற்றதை போன்ற எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டு, மிக நேர்த்தியாக உள்ள பிஇ.05 கூபே ஸ்டைலை பெற்றுள்ளது. கான்செப்ட் நிலையில் 4,370மிமீ நீளம், 1,900மிமீ அகலம், 1,635மிமீ உயரம், 2,775மிமீ வீல்பேஸ் கொண்டதாகும்.

INGLO EV பிளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட உள்ளது. InGlo பிளாட்பாரத்தை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் பகிர்ந்து கொள்ள உள்ளது.

ஸ்போர்ட்ஸ் எலெக்ட்ரிக் வாகனம் (Sports Electric Vehicle- SEV) என குறிப்பிடப்படுகின்ற இந்த காரில் 60-80kWh திறன் பெற்ற பேட்டரி பயன்படுத்தப்பட்டு 175kW வரை வேகமாக சார்ஜ் செய்யும் திறன் கொண்டதாக இருக்கலாம். இதன் மூலம் 30 நிமிடங்களுக்குள் 80 சதவிகிதம் பேட்டரியை சார்ஜ் செய்யும். 80kWh பேட்டரி பொருத்தப்பட்டால் சுமார் 435 கிமீ முதல் 450 கிமீ வரை ரேஞ்சு வழங்கும் என்று மஹிந்திரா முன்பே குறிப்பிட்டிருந்தது.

2025 ஆம் ஆண்டின் அக்டோபரில் மஹிந்திரா BE.05 எலக்ட்ரிக் எஸ்யூவி வெளியாகலாம்.

-be-05-coupe-suv-electric-spied

spy image source

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.