கோவை: கோவை கருமத்தம்பட்டி அடுத்த வாகராயம்பாளையம் புதூர், சந்திராபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கடந்த 28 ல் 18 நாள் பயணமாக காசி, சாய்பாபா கோயில் உள்ளிட்ட ஆன்மிக தளங்களுக்கு தனியார் பஸ்சில் சென்றனர். 7 ம் தேதி ஒடிசாவில் இருந்து குஜராத்தில் உள்ள கோவிலுக்கு புறப்பட்டனர். காலையில் அங்குள்ள தங்கும் விடுதி அருகே நின்ற போது பஸ்சின் மேல் வைக்கப்பட்டிருந்த உடமைகள் பல காணவில்லை.
பஸ்சில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, அதிகாலை 2 மணியளவில், தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்த போது, டூவிலரில் வந்த 3 பேரில் ஒருவர், ஓடும் பஸ்சில் தாவி ஏறி உடமைகளை கீழே தள்ளிவிட்டது பதிவாகியிருந்தது.
கீழே விழுந்த உடமைகளை மற்றொருவன் சேகரிக்க, டூவீலரை ஓட்டி வந்த நபர், பஸ்சில் ஏறிய நபரை அழைத்து கொண்டு திரும்பினான். சுற்றுலா சென்றவர்கள், முக்கியமான பொருட்களை பஸ் உள்ளே வைத்திருந்ததால் அவை தப்பின. பைகளுக்கு இடையே வைக்கப்பட்டு இருந்த ரூ.25 ஆயிரம் தப்பியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement