நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரின் முதல் வருட திருமண நாள் கொண்டாட்டம் நேற்றைய தினம் சிறப்பாக நடந்து முடிந்தது. காதல் கணவரான விக்னேஷ் சிவன் நேற்று முழுக்க தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதல் மனைவி நயன்தாரா, இரட்டை குழந்தைகள் குறித்த பதிவுகளை பகிர்ந்து வந்தார். இந்நிலையில் திருமண நாளில் நயன்தாராவுக்காக விக்கி கொடுத்துள்ள சர்ப்ரைஸ் குறித்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
கோலிவுட் சினிமாவில் பாப்புலரான ஜோடியான நயன்தாரா, விக்னேஷ் சிவன் முதல் வருட திருமண நாளில் தங்களின் இரட்டை குழந்தைகளின் முகத்தை முதன்முறையாக ரசிகர்களுக்கு காட்டினர். மேலும் இரட்டை குழந்தைகள் தங்களுக்கு திருமண நாள் வாழ்த்து கூறுவதை போன்ற க்யூட்டான புகைப்படம் ஒன்றையும் விக்னேஷ் சிவன் பகிர்ந்திருந்தார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விக்கி, நயன் குழந்தைகள் இவ்வளவு வளர்ந்துட்டாங்களா என ஆச்சரியப்பட்டனர். இந்நிலையில் திருமண நாளில் நயனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன். அதில் விக்கி, நயனின் படங்களின் பாடல்களை விக்கிக்கு நெருக்கமான ஒருவர் புல்லாங்குழலில் வாசித்துள்ளார்.
இதுக்குறித்த விக்னேஷ் சிவன் தன்னுடைய பதிவில், எங்களின் எளிமையான அதே சமயம் சிறப்பான தருணங்கள். இது எங்களின் முதலாம் ஆண்டு திருமண நாள் கொண்டாட்டம். நவீன் உன்னுடன் நான் வளர்ந்தேன். உன்னுடன் ஒரே மேடையில் டிரம்ஸ் வாசித்தேன். என் வாழ்க்கையின் பல நிலைகளில் நீ வாசித்ததை கேட்டுள்ளேன். ஆனால் இந்த நிலை தான் நம் அனைவரின் மறக்க முடியாத சிறப்பானது என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
Rajini: ‘தலைவர் 170’ படத்தில் இணையும் இரண்டு சூப்பர் ஸ்டார்கள்: அதுவும் 32 ஆண்டுகளுக்கு பிறகு.!
நவீன் புல்லாங்குழல் வாசித்த சமயத்தில் விக்கி, நயனின் நண்பர்களும் உடன் இருந்துள்ளனர். ஆரம்பத்தில் புல்லாங்குழல் இசையை விக்கியுடன் சேர்ந்து பார்த்து ரசித்து சிரித்து கொண்டிருந்த நயன்தாரா, ஒருக்கட்டத்தில் விக்கியின் தோளில் சாய்ந்து எமோஷனலாகி அழ ஆரம்பித்துவிட்டார். இந்த உணர்ச்சிகரமான வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த அழகான ஜோடிக்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
View this post on InstagramA post shared by Vignesh Shivan (@wikkiofficial)
விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்தே காதலிக்க துவங்கினர். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த இந்த ஜோடி கடந்த 2022 ஆம் ஆண்டு ஜுன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு உயிர், உலகு என இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Vijay: அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை.. விஜய்யின் திடீர் முடிவால் ரசிகர்கள் கவலை.!