புவனேஸ்வர்: கோர விபத்து நடந்த ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பஹாநகர் பஜார் ரயில் நிலையம், சி.பி.ஐ.,யின் கட்டுப்பாட்டில் சென்றுள்ளது. ‘விசாரணை முடியும் வரை, இந்த ரயில் நிலையத்தில் எந்த ரயிலும் நிறுத்தப்படாது’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு, பஹாநகர் பஜார் ரயில் நிலையம் அருகில், கடந்த 2ம் தேதி மூன்று ரயில்கள் மோதிய கோர விபத்து நடந்தது.
இந்த விபத்தில் சதி திட்டம் ஏதும் உள்ளதா என்பது குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி, பஹாநகர் பஜார் ரயில் நிலையத்தை சி.பி.ஐ., தன் வசம் எடுத்துள்ளது. இங்குள்ள ஆவணங்கள் மற்றும் இயந்திரங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்த ரயில் நிலையம் வழியாக தினமும், 170 ரயில்கள் செல்கின்றன; ஏழு ரயில்கள் நிறுத்தப்படுகின்றன.
தற்போது சி.பி.ஐ., விசாரணை கட்டுப்பாட்டில் இந்த ரயில் நிலையம் உள்ளதால், இங்கு ரயில்கள் நிறுத்தப்படுவது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக, தென் கிழக்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement