இந்தியாவின் முதன்மையான எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளரான ஓலா எலக்ட்ரிக் தனது S1 Air மாடலில் 2kWh, 4kWh மற்றும் S1 மாடலில் 2kWh என மொத்தமாக மூன்று வேரியண்டுகளை நீக்கியுள்ளது.
2kWh, 4kWh மேலே குறிப்பிட்ட மாடல்களில் வாடிக்கையாளர்கள் பதிவு செய்திருந்தால் 3Kwh வேரியண்டிற்கான கூடுதல் கட்டணத்தை செலுத்தலாம் அல்லது ஆர்டரை ரத்து செய்து கொள்ளும் வசதியை வழங்கியுள்ளது. குறைந்த வரவேற்பினை பெற்றதாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Ola S1 Air
ஓலா S1 ஏர் வேரியண்டில் இப்பொழுது ஸ்கூட்டர் 3kWh பேட்டரி ஆப்ஷனை கொண்டுள்ளது. பொதுவாக, 4.5Kw பவரை வெளிப்படுத்துகின்ற ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் 85KM/hr ஆகும். 0-100% சார்ஜிங் செய்ய அதிகபட்சமாக 4.5 மணி நேரம் தேவைப்படும்.
Ola S1 Air Specs | |
Battery Capacity | 3kWh |
Motor Type | PMSM |
Power (kW) | 4.5 kW |
Torque (Nm) | 58 Nm |
Top Speed | 85 km/hr |
Range (km) | 125km |
Modes | Eco, Normal, Sports |
Acceleration (0-60Km) | 9.3 Secs |
எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விநியோகம் ஜூலை மாதம் முதல் வாரத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் கொண்டதாக உள்ளது. பீங்கான் வெள்ளை, நியோ மின்ட், கோரல் கிளாம், ஜெட் பிளாக் மற்றும் லிக்விட் சில்வர் என ஐந்து நிறங்களை பெற்றதாக வந்துள்ளது.
அடுத்து, எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்ட குறைந்தபட்ச விலை கொண்ட 2kwh பேட்டரி ஆப்ஷன் நீக்கப்பட்டுள்ளது.
Ola S1 Specs | |
Battery Capacity | 3kWh |
Motor Type | PMSM |
Power (kW) | 5.5 kW |
Torque (Nm) | 58 Nm |
Top Speed | 90 km/hr |
Range (km) | 141km (Eco) |
Modes | Eco, Normal, Sports |
Acceleration (0-60Km) | 5.9 Secs |
Ola S1 Air 3Kwh – ₹ 1,09,999
Ola S1 3Kwh – ₹ 1,29,999
Ola S1 Pro 4Kwh – ₹ 1,39,999
(எக்ஸ்-ஷோரூம் இந்தியா)
மேலும் படிக்க – ஹீரோ விடா வி1 பிளஸ் வேரியண்ட் நீக்கம்