வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு: இலங்கையில் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பான, நல்லிணக்கத்துக்கான செயல் திட்டத்தை அமல்படுத்தும் சட்ட தயாரிப்பு பணிகளை விரைவுபடுத்தும்படி, நீதித்துறை அதிகாரிகளுக்கு, அந்த நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார்.
நம் அண்டை நாடான இலங்கையில், அந்த நாட்டு ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த சண்டை, 2009ல் முடிவுக்கு வந்தது. இந்த சண்டையில் இலங்கை ராணுவம் வெற்றி பெற்றது.
இதையடுத்து, தமிழர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலான செயல் திட்டத்தை அமல்படுத்த இலங்கை அரசு முடிவு செய்தது.
இந்த செயல் திட்டம் குறித்து சமீப காலமாக தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து கோரிக்கை வலுத்து வந்தது. இந்நிலையில், இது தொடர்பான ஆலோசனை கூட்டம் சமீபத்தில் கொழும்பில் நடந்தது.
இதில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சாப்ரி, அதிபரின் ஆலோசகர் சகல ரத்நாயகே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பான நல்லிணக்கத்துக்கான செயல் திட்டத்தை அமல்படுத்துவதற்கான சட்டத்தை தயாரிக்கும் பணியை விரைவு படுத்தும்படி, நீதித்துறை அதிகாரிகளுக்கு அதிபர் ரணில் உத்தரவிட்டார்.
சட்ட வரைவு, நிறுவன நடவடிக்கைகள், நிலப் பிரச்னை, கைதிகளை விடுதலை செய்தல், அதிகார பரவல் ஆகிய ஐந்து அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement