சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடராக மாறியுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது.
இந்த தொடரில் கண்ணன் வாங்கிய கடனுக்காக அவரை வங்கி ஊழியர்கள் அடிக்க, அவர்கள் கண்ணனின் அண்ணன் கதிர் தாக்குகிறார்.
இதனால் அவர் சிறை செல்லும் நிலை ஏற்படுகிறது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு மூத்த அண்ணன் மூர்த்தி 5 லட்சம் ரூபாய் கொடுத்து அவரை மீட்டு கொண்டு வருகிறார்.
வயிற்றில் அடிவாங்கும் முல்லை :விஜய் டிவியின் முக்கியமான தொடராக மாறியுள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ். தொடர்ந்து இந்த வாரமும் சேனலின் டிஆர்பியில் அதிக புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. 4 அண்ணன் -தம்பிகளின் வாழ்க்கையையும் அவர்களது ஒற்றுமை மற்றும் பாசத்தையும் மையமாக கொண்டு இந்தத் தொடர் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அவர்கள் மட்டுமில்லாமல் அவர்களது மனைவிகளின் ஒற்றுமையும் இந்த சீரியலில் பிரதானமாக காணப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மொய் வைப்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த நால்வரும் மூன்று குடும்பங்களாக பிரிந்தனர். ஜீவா தன்னுடைய மாமனார் வீட்டுடன் செட்டில் ஆக, தனியாக சென்று வாழ்ந்து காட்டுவோம் என்று சவால் விட்டு வெளியில் சென்ற ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் இருவரும் வாழும் வழி தெரியாமல் கிரெடிட் கார்டில் ஆடம்பரமான பொருட்களை வீட்டிற்காக வாங்கிப் போடுகின்றனர்.
இதனால் வங்கி ஊழியர்கள் கண்ணனை அடிக்க, இதை கேள்விப்படும் கதிர், அவர்களை அடித்துத் துவைக்கிறார். இதையடுதது கதிரை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். இந்நிலையில் வங்கியில் கேட்கப்படும் 5 லட்சம் ரூபாயை படாத பாடு பட்டு திரட்டும் மூர்த்தி, கதிரை சிறையில் இருந்து மீட்டு வருகிறார். ஆனால் இதுகுறித்து கொஞ்சமும் யோகிக்காமல் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை தன்னுடைய வீட்டிற்கே அழைத்து வருகிறார் கதிர்.
இந்நிலையில் தன்னுடைய மனைவி முல்லையை மருத்துவமனை செக்கப்பிற்கு அழைத்து செல்கிறார் கதிர். அப்போது அங்குவரும் வில்லன்கள், அவரையும் முல்லையையும் தாக்குகின்றனர். இதில் நிலைகுலையும் முல்லை, கீழே விழுகிறார். அப்போது அவரது வயிற்றில் அடிபடுகிறது. இதனால் வயிற்றுவலியில் துடிக்கிறார் முல்லை. இதையடுதது அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கிறார் கதிர். அங்கு அவருக்கு அதிகமான பிரச்சினைக்கிடையில் பெண் குழந்தை பிறக்கிறது.
முன்னதாக கதிர் மற்றும் முல்லைக்கு குழந்தை பிறக்காமல் இருந்த நிலையில், ஊராரின் பேச்சு ஆளானார்கள். இதையடுத்து நீண்ட காலங்கள் கழித்தே முல்லை கர்ப்பமானார். இதனால் குடும்பத்தினர் அவரை மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டனர். இந்நிலையில் அவருக்கு வயிற்றில் அடி ஏற்பட்டதால் குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த வருத்தத்தில் காணப்படுகின்றனர். ஆனால் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்து அவர்களை ஆசுவாசப்படுத்துகிறது.