Por Thozhil: ப்ளூ சட்டை மாறனின் 'போர் தொழில்' பட விமர்சனம்: சரத்குமாரின் ரியாக்சன் இதுதான்.!

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக திகழ்பவர் ப்ளூ சட்டை மாறன். ஒவ்வொரு படங்கள் வெளியாகும் போது இவரின் விமர்சனத்திற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருப்பார்கள். விஜய், அஜித் என எல்லா நடிகர்களின் படங்களையும் இரக்கம் இல்லாமல் வச்சு செய்வார் மாறன். இதனாலே திரையுலகை சார்ந்த பெரும்பாலானோர் இவரை திட்டி தீர்ப்பது வழக்கம்.

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
இந்நிலையில் இவரை நடிகர் சரத்குமார் பாராட்டியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. அண்மையில் சரத்குமார் நடிப்பில் வெளியான ‘போர் தொழில்’ படம் பாராட்டுக்களை குவித்து வருகிறது. ப்ளூ சட்டை மாறனும் தன்னுடைய விமர்சனத்தில் இந்தப்படத்தை ஆஹோ, ஓஹோவென பாராட்டினார். இவரே பாராட்டி விட்டாரே என ரசிகர்களும் ‘போர் தொழில்’ படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய விமர்சனத்தில் சரத்குமார், அசோக் செல்வன் என ஒவ்வொரு கேரக்டரையும், படத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் பாராட்டி தள்ளியிருந்தார். இந்நிலையில் மாறனின் பாராட்டால் நெகிழ்ந்த சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், போர் தொழில் படத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் பாராட்டியதற்கு நன்றி. உங்களின் விமர்சனத்தால் இந்தப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என பதிவிட்டுள்ளார்.

Kamal Haasan: ‘இந்தியன் 2’ படத்திற்காக கமல் படும் கஷ்டம்: அதுவும் இந்த வயதில்..!

அவரின் இந்த பதிவை தொடர்ந்து ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், இப்படிப்பட்ட வார்த்தைகளை கேட்டு மகிழ்ச்சியடைகிறேன். உங்களிடமிருந்து இன்னும் இதுபோன்ற சுவாரஸ்யமான கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறேன். அருமையான படத்தை கொடுத்ததிற்கு நன்றி என பதிவிட்டுள்ளார். இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘போர் தொழில்’ படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். ‘ராட்சசன்’ படத்திற்கு பிறகு தமிழில் ஒரு தரமான க்ரைம் திரில்லர் என இந்தப்படத்தை பார்த்த ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், பல தரப்பிலிருந்தும் ‘போர் தொழில்’ படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால் இந்தப்படத்திற்கான திரையரங்கு காட்சிகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Prabhu Deva: மீண்டும் அப்பாவான நடிகர் பிரபு தேவா.. மகிழ்ச்சியில் மொத்த குடும்பம்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.