‘ஜெயிலர்’ படப்பிடிப்பில் இருக்கும் போதே ரஜினியின் அடுத்த படமான ‘தலைவர் 170’ குறித்த அறிவிப்பு வெளியானது. ‘ஜெயிலர்’ ஆக்ஷன் ஜானரில் உருவாகி வரும் நிலையில் ‘தலைவர் 170’ படம் எப்படியும் அடர்த்தியான கதைக்களத்தை கொண்டிருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏனென்றால் இந்தப்படத்தை ‘ஜெய் பீம்’ பட புகழ் த.செ. ஞானவேல் இயக்கவுள்ளார்.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
எப்படியும் இந்தப்படத்தில் ரஜினி நடிப்புக்கு தீனி போடும் அளவிற்கு கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும் என ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர். இந்நிலையில் இந்தப்படத்தில் பாலிவுட் பிரபலம் ஒருவர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோலிவுட்டில் ரஜினி எப்படியோ அதே போல் பாலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இவர் ‘தலைவர் 170’ படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
ஏற்கனவே இவர்கள் இருவரும் ‘ஹம்’ என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். கடந்த 1991 ஆம் ஆண்டு இந்தியில் இந்தப்படம் வெளியாகியிருந்தது. அதன்பிறகு இந்த கூட்டணி மறுபடியும் இணையாத நிலையில் தற்போது சுமார் 32 ஆண்டுகளுக்கு ‘தலைவர் 170’ படத்தில் ரஜினி அமிதாப் பச்சன் இணைந்து நடிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.
‘தலைவர் 170’ படத்தில் ரஜினி இஸ்லாமியராக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. உண்மை சம்பவங்களை மையமாக வைத்து போலி என்கவுண்டர் குறித்து பேசும் விதமாக இந்தப்படத்தை இயக்கவுள்ளார் த.செ. ஞானவேல். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் வில்லனாக நடிக்க விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அவர் வில்லனாக நடிக்க மறுத்துவிட்ட நிலையில் அர்ஜுனை அந்த கேரக்டரில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருதாக கூறப்படுகிறது.
நயன் – விக்கிக்கு வாழ்த்து சொன்ன இரட்டை குழந்தைகள்: இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்களா..!
இதனிடையில் அமிதாப் பச்சன் ‘தலைவர் 170’ படத்தில் நடிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சோஷியல் மீடியாவை அதிர விட்டு வருகிறது. ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்தப்படம் உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பை அண்மையில் முழுவதுமாக நிறைவு செய்தனர் படக்குழுவினர். ‘ஜெயிலர்’ படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.
இதனிடையில் ரஜினி தனது மகள் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். கிரிகெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் முதன்மை கேரக்டரில் நடிக்கின்றனர். லைகா தயாரிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். ‘லால் சலாம்’ படத்தில் மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் வேடத்தில் ரஜினி நடிப்பது குறிப்பிடத்தக்கது.
Maaveeran: டாக்டர், டான் பட வரிசையில் இணைந்த ‘மாவீரன்’: எஸ்கேவுக்கு அடுத்த ஹிட் ரெடி.!