ஒட்டாவா : கனடாவில் எரிந்து வரும் காட்டுத் தீயின் புகை, நார்வே வரை பரவி உள்ளதாக, விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
வட அமெரிக்க நாடான கனடாவில், காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. அதன் அண்டை நாடான அமெரிக்காவின் சில பகுதிகளை, காட்டுத் தீயின் புகை சூழ்ந்துள்ளது. இதனால், 7.5 கோடி மக்கள் காற்று மாசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த சில நாட்களாக, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து நாடுகளை கடந்து சென்ற காட்டுத் தீயின் புகை, தற்போது, ஐரோப்பிய நாடான நார்வே வரை பரவி உள்ளதாக, விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து, நார்வேயைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானி நிகோலாஸ் எவாஞ்சலியோ கூறியதாவது:
காட்டுத் தீ புகை நீண்ட துாரம் பயணிப்பது அசாதாரணமானது அல்ல. கனடா காட்டுத் தீயில் இருந்து வரும் புகை அதிக உயரத்தில் இருப்பதால், வளிமண்டலத்தில் நீண்ட காலம் தங்கி வெகு துாரம் பயணிக்கிறது.
நார்வேயில் உள்ள மக்கள், காட்டுத் தீயின் புகையை லேசான மூடுபனியாக உணரலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement