மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் கபூர் தியேட்டரில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை வெளிப்படையாக பேட்டி ஒன்றில் சொல்லி அதிர்ச்சி கிளப்பி இருந்தார்.
ஆலியா பட், வித்யா பாலன், சோனம் கபூர் உள்ளிட்ட நடிகைகளுடன் நடந்த ரவுண்ட் டேபிள் சினிமா நிகழ்ச்சியின் போது சிறு வயதில் தனக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமை குறித்து ஓபனாக பேசியிருந்தார் சோனம் கபூர்.
தனுஷின் முதல் இந்தி படமான ராஞ்சனா (அம்பிகாபதி) படத்தில் ஹீரோயினாக நடித்த அதே பாலிவுட் ஹீரோயின் தான்.
வாரிசு நடிகை: ஸ்லம் டாக் மில்லியனர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள் தான் சோனம் கபூர். ரன்பீர் கபூர் நடித்த சாவரியா படத்தின் மூலம் பாலிவுட்டில் வாரிசு நடிகையாக அறிமுகமானார். முன்னணி நடிகையாக வலம் வந்த சோனம் கபூர் சமீப காலமாக படங்கள் பெரிதளவில் ஓடாத நிலையில், சிறு சிறு படங்களில் நடித்து வருகிறார்.
தொழிலதிபர் ஆனந்த் ஹவுஜாவை திருமணம் செய்துக் கொண்ட சோனம் கபூருக்கு சமீபத்தில் குழந்தையும் பிறந்தது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் பட ஹீரோயின்: தனுஷின் ராஞ்சனா படத்தில் சோயா எனும் கதாபாத்திரத்தில் சோனம் கபூர் நடிப்பில் மிரட்டி எடுத்திருப்பார். மாணவ அரசியலையும் காதலையும் மையமாக வைத்து உருவான அந்த படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான அத்தனை பாடல்களும் இந்தி மற்றும் தமிழில் வேறலெவல் ஹிட் அடித்தன.
முன்னணி நடிகர்களுடன் ஜோடிப் போட்டு நடித்து வந்த சோனம் கபூர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா உடன் இணைந்து ஓரினச் சேர்க்கையாளராக நடித்து இருந்தார். அந்த படத்திற்கு பிறகு சோனம் கபூருக்கு பாலிவுட்டில் டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு அப்படியே டோட்டலாக குறைந்து விட்டது.
தியேட்டரில் பாலியல் கொடுமை: நடிகை சோனம் கபூர் முன்னதாக ஒரு பேட்டியில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து கூறியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதில் அவர், “நான் என் தோழிகளுடன் Gaiety Galaxy தியேட்டரில் தனது படம் பார்க்கச் சென்றிருந்தேன். படத்தின் இடைவேளையின் போது ஸ்நாக்ஸ் வாங்க வெளியே வந்தேன்.
அங்கிருந்த கூட்டத்தை பயன்படுத்தி என் பின்னாடி வந்த நபர் ஒருவர் திடீரென என் மார்பை கை வைத்து அழுத்தி விட்டு ஓடி விட்டார். அப்போது எனக்கு வெறும் 13 வயது தான். பெரிதாக மார்பகங்கள் கூட எனக்கு வளர்ந்திருக்கவில்லை. அப்போது என்ன செய்வது என்றே தெரியாமல் கதறி அழுது விட்டேன்.
நம் நாட்டில் இளம் பெண்கள் பலரும் சிறு வயதிலேயே இதுபோன்ற பல்வேறு பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி வருகின்றனர். ஆண்கள் இதுபோன்ற கேவலமான காரியங்களை செய்வதை கைவிட வேண்டும் என்றும் அந்த பேட்டியில் சோனம் கபூர் பேசியிருந்தார்.
தற்போது சோனம் கபூர் மீண்டும் சினிமாவில் பிசியாக தொடங்கி உள்ள நிலையில், அவரது பழைய பேட்டிகள் எல்லாம் டிரெண்டாகி வருகின்றன. 2019ல் வெளியான தி சோயா ஃபேக்டர் படத்தில் கடைசியாக நடித்த சோனம் கபூர் பிளைண்ட் எனும் படத்தில் தற்போது நடித்து முடித்து அதன் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.